திங்கள், 25 ஜூலை, 2016

தவறுகள்

பிறரிடமிருந்து
நாம் மறைக்கும் அனைத்தும்,
தவறு என தெரிந்தே
நாம் செய்யும் தவறுகள்....

முத்தங்கள்

முத்தங்கள் இனிக்கின்றனவோ
ஆறாம் அறிவு அற்ற உயிர்களுக்கும்
உன் அன்பான இதழ்கள் தருவதினால் ...

ஓவியம்ஓவியன் வரைந்தது
ஓவியம் மட்டும் அல்ல
தனது உயிர் தந்து
உயிர்பித்த கற்பனை பெண்

பணம்


பணம் இருப்பவர்களுக்கு மனமிருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதர்களிடம்
பணம் இருப்ப்தில்லை....
இருந்தும் இருப்பதை
பகிர்ந்து வாழும்
உண்மையான தெய்வம்...

துணை

நம் கரம் பிடித்து
நடை பழக்கிய தந்தைக்கு
நாம் இரு கரம் கொடுத்து
துணையாக இருப்போம்
நம் மூச்சு உள்ள வரை ...

சண்டைகள்

சண்டைகள் சங்கடங்களை தரும்
நம்மை விட அதிகமாக
நம் சந்ததிகளுக்கு

ஒற்றை சொல்

நீ உதிர்த்த ஒற்றை சொல்லுக்கு எத்தனை வலிமை???
என்னை ஆனந்த கடலில் மூழ்கடிக்கும்
சில நேரங்களில் மட்டுமே என்னை
சோக கடலில் தத்தலிக்க வைக்கிறது