செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஊஞ்சல்‬


சின்னஞ்சிறு குழந்தைகள்
விரும்பும் ஆசனம்!

சிறியவர் முதல் பெரியவர் வரை
மகிழ்ச்சியை அள்ளித்தரும்
சிம்மாசனம் !!

அவர் அவர் வசதிக்கேற்ப
வாங்கக்கூடிய ஆசனம்

தாய் மடியின் சுகத்தை தந்து
நம்மை தாலாட்டும் ஆசனம்

தோழனாக தோல்விகளில்
தோல் கொடுக்கும் ஆசனம்

துவண்டு இருந்தால்
தலை கோதி துயர் போக்கும்
ஆசனம் !!!

இன்றைய உலகம் ....


ஒரு கூட்டுக்குள்
அடைபட்ட
சிறு பறவையை

பறக்க பழக்கி,
பறக்க தெரிந்து
பறந்து மகிழும்
வேளையில்

சிறகுகளை
வெட்டி
விளையாடுவதே
இன்றைய உலகம் ....

நண்பன்


நடக்க இயலா
தூரத்தை
நான் கடப்பேன்
நீ என் உடன் இருந்தால்
நட்பையும் உயிராக
நான் மதிப்பேன்
நீ நண்பனாக
என் உடன் இருந்தால் ..

வேலை


எதை பழித்தாலும் பழி
ஆனால்
எவ்வளவு கடினமாக
இருந்தாலும்,
சோறு போடும்
வேலையை மட்டும்
பழிக்காதே...

ஒரே மொழி..


உலகில்
அன்பும்
காதலும்
மட்டுமே
அனைத்து
உயிர்களும்
உணரக்கூடிய
ஒரே மொழி..

என் அழகு வெண் நிலவே!!!


நான் எவ்வளவு தூரம்
பயணித்தாலும்
என்னை
பின் தொடர்ந்து
என்னுடனேயே
வருகிறாயே
என் அழகு
வெண் நிலவே!!!
என் மேல் அப்படி
என்னடி காதல் உனக்கு !!!!

தமிழாக நீ இருக்க


தமிழாக நீ இருக்க - அதன்
இனிமையாக நான் இருக்க
மலராக நீ இருக்க - அதன்
வாசமாக நான் இருக்க
கவிதையாக நீ இருக்க - அதன்
வரிகளாக நான் இருக்க
இணை பிரியாமல்
இணைந்தே இருப்போம்
இருவரும் இறுதிவரை....

சிலர் பலர்


சிலர் சில வார்த்தை பேசினாலும்
ரசிக்க தோன்றும்
பலர் பல வார்த்தை பேசினாலும்
வெறுக்கத் தோன்றும்

யோசி


முடிவெடுக்கும் முன்
ஆயிரம் முறை யோசி ...
முடிவெடுத்த பின்
ஒரு நொடி கூட
தாமதிக்காதே!!!

இன்றைய காதல்!!!


மழைக்கு பின்
முளைத்த காளானாக
இன்றைய காதல்!!!
முளைப்பதும் தெரிவதில்லை !!
மடிவதும் தெரிவதில்லை!!

தேடல்


இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடத்தில் தேடி
இருப்பதையும் தினம் தினம்
இழந்து கொண்டே
இருக்கின்றோம் ....

இவ்வுலகம்


பலநூறு அடி முன்னேறினாலும்
கண்டு கொள்ளாத இவ்வுலகம்
ஒரு அடி சறுக்கினாலும்
கை தட்டி சிரிக்க தவறுவதில்லை
எதையும் காதில் போடாமல்
நம் வழியில் பயணிப்பதே நல்லது .

வாழ்க்கை!!


நமது பிறப்பிற்கும்
இறப்பிற்கும்
இடைப்பட்ட
அழகிய
சிறிய பயணமே
நமது வாழ்க்கை!!

வாய்ப்பு வாழ்க்கை


எளியதை அரியதாக நினைத்து
அடி ஏதும் எடுத்து வைக்காமல்
வாய்ப்புகளையும் வாழ்க்கையையும்
இழந்து கொண்டே இருக்கின்றோம் ...

இன்று நேற்று நாளை


நேற்று என்பது முடிந்த கதை
நாளை என்பது தொடர் கதை
இன்று என்பது நிஜ வாழ்க்கை
இவை அனைத்தும் நம் கையில்
நம் தன்னம்பிக்கையில் ..

தன்னம்பிக்கை


இறைவன் தந்ததோ
இயற்கை தந்ததோ
தடைகள் என்று ஏதும் இல்லை
தன்னம்பிக்கை தடைகளை
தகர்த்து எரியும் கை...

இளம் பிஞ்சு ...


காதல் காற்றோடு போனது
திருமணம் தீயோடு போனது
வாரிசோ வழியின்றி வீதியில்!!
விளங்காத புதிராக
புழுகி நிற்கிறது இளம் பிஞ்சு ...

முட்டாள் தனமே!!!


சில முட்டாள்களின்
முட்டாள் தனமான செயலினால்
நாம் வேதனைப்படுவோமானால்
அது நமது முட்டாள் தனமே!!!

ஆசை


கவிதை தமிழில் உன்னைப் பாட ஆசை
கண் இரண்டால் உன்னை ரசிக்க ஆசை

கரம் கோர்த்து மழையில் நடக்க ஆசை
கவலை மறந்து உன் தோள் சாய ஆசை

கடற்கரையில் விளையாட ஆசை
கரம் பற்றி மஞ்சள் கயிறு சூட ஆசை

காத்திருக்கும் என் ஆசைகள் என்றென்றும்
காலமும் நேரமும் நம் கை கூடும் வரை ...

நீர் நிலைகள்


நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே நிலங்களை அழகாக பிரித்து வைத்துள்ளனர். இது வீடு கட்டி வசிக்க உகந்த இடம் , இது விவசாயத்திற்கான இடம் மற்றும் இது நீர் நிலைகள் அமைக்க சரியான இடம் என்று.

நாம் அந்த வரம்புகளை உடைத்து ஏரிகள் மற்றும் விளைநிலங்களில் வீடு கட்டினால் மழைநீர் வீட்டில் நுழையாமல் வேறென்ன செய்யும் ...

மழை பெய்த உடன் நீர் அழகாக ஏரிகளையும் நீர்நிலைகளையும் நிரப்பிவிட்டது. ஏரிகளில் வீடு கட்டினா தண்ணீர் எங்கே போகும். தன் வீட்டை தேடி தானே தண்ணீர் போகும் .

இனி எந்த விடயங்களிலும் இயற்கையையும் நம் முன்னோர்களையும் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல் நலம்.

மௌனம்


நாம் கோவப்பட வேண்டும்
என்பதற்காகவே
உதிர்க்கப்படும்
வார்த்தைகளுக்கு
பதில் பேசுவதைவிட
சிறந்தது மௌனம் ....

வாழ்க்கை சரித்திரம் ...


எப்படி பிறந்தோம் எப்படி வளர்ந்தோம்
என்பதை விட
எப்படி வாழ்ந்தோம்
என்ன நன்மைகள் செய்தோம்
என்பதே நம் வாழ்க்கையின் சரித்திரம் ...

ஒரு தனி உயிரே!!


உங்கள் வாரிசாக இருந்தாலும்
அதுவும் வேறு ஒரு தனி உயிரே!!
அது உங்கள் பிம்பமாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை....

போலி உறவுகள் !!!


இல்லாத ஒன்றை இருப்பதாக
நினைத்து நினைத்து
உயிராக இருக்கும் உயிரை
உதாசீனப்படுத்துவதே
இன்றைய போலி உறவுகள் !!!

காதல் கவிதை


காதல் என்ற கவிதை
காற்றில் மணம் வீசி
கனவில் உருவான என்
கற்பனை காதலனின்
கவித்துவமான
கவின் மிகு
காவிய முகம்
கவர்ந்திழுத்து என்னை
கவி பாட செய்கிறது நம்
கன்னித்தமிழில்!!!

கொட்டும் மழையே


கொட்டும் மழையே
கொஞ்சும் மழையே
கொதித்தது ஏனோ?
கொட்டித் தீர்ப்பதும் ஏனோ?

கொட்டும் அருவியாய்
கொட்டி கொட்டி
கொடு கொடு என்றவர்கள்
கொடுத்தது போதும் போதும் என

கெஞ்சும் அளவிற்கு
கொடுத்தும் தீரவில்லை உன்
கொடைத் தன்மை....

தொலைந்து போன காதல்


தொடும் தூரத்தில் நீ இருந்தும்
தொலைதூரத்தில் இருப்பதாக உணர்கிறேன்
தொலைந்து போன உன் காதலால் ...

பழிக்குப் பழி ....

மனிதன் ஏரிகளையும்
நீர்நிலைகளையும் அழிந்து
தனது வீடாக்கினான்....
பழிக்குப் பழி ....
இது தானோ???

வேதனையும் சோதனையும்

வேதனையும்
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???

மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...

வரலாறு காணாத மழை


வரலாறு காணாத வரட்சி
வரலாறு காணாத மழை
ஒன்று சேர்த்தது மக்களை
எந்த வித பாகுபாடின்றி
பல உயிர்களை பலிவாங்கி ...

Be ready for everything..


Be ready for everything..
நடைமுறை படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள்:
1. வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் சிறிய அளவு பணம் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும் .
2. குறிப்பிட சிலரது தொலைபேசி எண்கள் நினைவில் பதிய வைத்தல் வேண்டும் .
3. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட சிறிய புத்தகம் ஒன்று கையில் வைத்திருக்க வேண்டும் .
4. எமர்ஜன்சி விளக்கு, டார்சன் லைட் மற்றும் மெழுகுவர்த்தி வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
5. முக்கிய ஆவணங்களின் நகல்கள் தூரத்தில் இருக்கும் உறவினர்கள் வீட்டில் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . அவற்றை ஸ்கேன் செய்து மெயில் அட்டாச் செய்து வைக்க வேண்டும் .
6. மொபைல் போன்களில் பேலன்ஸ் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாமல் மொபைல் சார்ஜ் செய்ய சிறிய பேட்டரிகள் வாங்கி வைக்கவும் .
7. ஒரு வீட்டில் மூன்று நான்கு நெட்வொர்க் சிம் பயன்படுத்தலாம் .
8. அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும் .
9. அத்தியாவசிய மருந்துகள் எப்போதும் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் .
10. வீட்டில் உள்ள அனைவரும் அவசரநிலை வந்தால் எப்படி எதிர்கொள்வது என முன்பே பேசி வைத்தால் அவசரகாலத்தில் வீண் பதட்டம் குறையும் .

காற்றழுத்த தாழ்வு நிலை

பொறுத்துப் பொறுத்து பார்த்த நிலம்
பெறும் காற்றழுத்த தாழ்வு நிலையாக
ஆகாயத்தில் நிலை கொண்டு
பொங்கி வரும் வெள்ள நீரினால்
மனித நேயத்தை நெருப்பாக மலரச்செய்தது..

திங்கள், 14 டிசம்பர், 2015

மாமனிதரே

உழைக்க கை இருந்தும்
உழைக்கத் தயங்குபவர்கள் மத்தியில்
உடலின் குறையை உதரிவிட்டு
உழைக்கும் இந்த மனிதர் மாமனிதரே.....

காதல் கோட்டை


மன்மதனே கூட
மங்கையின் மனதில்
காதல் கோட்டை
கட்டுவது
கடினமே!!!

ஆனால் ,
ஒரு முறை
கட்டிவிட்டால்
கலைக்கவே
இயலாத காதல்
கோட்டை அது!!!

சனி, 26 செப்டம்பர், 2015

மகிழ்ச்சி


சில நேரங்களில்
நாம் எதிர்பார்க்காமல்
நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு 

ஈடு இணை ஏதும் இல்லை ...

காதல்


சிந்திக்க விடாமல்
சிந்தனையை
சிதைத்து
சிதரடிக்கும்
சிக்கலின்
பெயர் தான்
காதல் ....

அன்பு


மறக்க நினைக்க நினைக்க
மறக்க முடியா உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் உயிர் பெற
மரணமும் கூட பிரிக்க இயலா
மாசற்ற அன்பு - என்னை
அடக்கம் செய்தாலும்
அழியப் போவது இல்லை....

இணைவோம் நட்பினால்


நட்பினால் இணைந்தோம்;
அன்பாக பழகி மகிழ்ந்தோம்...
சண்டைகள் பல போட்டு
மீண்டும் மீண்டும் இணைந்தோம்...
வேதனை இல்லா பல சண்டை ..
வேதனை தந்து பிரிவை தந்தது...
விலக்கி வைத்து வேடிக்கை காட்டுது ...
விடியலில் வலியை மறந்து
இணைவோம் நட்பினால்...

காதல்


கண்ணும் கண்ணும் நோக்க
காதலினால் நான் தவித்து
கரம் பற்ற நினைக்க
கவி பல படைத்து
காதல் செய்கிறேன் - என்
கனவு காதலனை
கற்பனை என்ற என்
கனவு சாம்ராஜ்ஜியத்தில்

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வாழ்க்கை லட்சியம்


உன் தன்னம்பிக்கையை விட
உன் தோல்வி பெரிதல்ல
உன் உழைப்பை விட
உன் வறுமை பெரிதல்ல
உன் முயற்சிகளை விட
உன் வெற்றி பெரிதல்ல
உன் வாழ்க்கையை விட
உன் லட்சியம் பெரிதல்ல.....

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ..



விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ...

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.

பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.

மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.

தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
நான் செய்த பிள்ளையார் குடை.....


உன் காதலனாக


தூது போக
பறவை இருந்தும்
நானே பறந்து வந்தேன்
சேதி சொல்ல!!!
தூதுவனாக அல்ல
உன் காதலனாக....

தமிழை மிஞ்சிய மொழி


மல்லிகையை மிஞ்சிய மலரும் இல்லை
புன்னகையை மிஞ்சிய பரிசும் இல்லை
அன்னையை மிஞ்சிய உறவும் இல்லை
தமிழை மிஞ்சிய மொழியும் இல்லை......

கணவன் மனைவி


கணவன் Zero என்றாலும்
Hero தான் மனைவிக்கு!!

மனிதநேயம்



மனிதநேயம் மிக்க மனிதர்கள்
இப்புவியில் இருக்கும் வரை
மனிதகுலமும் உலகமும்
உயிரோடு இருக்கும்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

கனவு

உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க
உறங்காமல் விழித்துக்
கொண்டிருக்கிறேன் - நீ
உறங்கும் நேரங்களில்!!!

‪பணம்‬ ‪விவசாயி‬

மண் வாசம் வீசும்
உன் மீது
என் வாசம் வீச
காத்துகிடக்கிறேன்
நடக்காது என தெரிந்தும்??

உண்மை காதல்

எனக்கு நீ பொருத்தமானவன்
என்பதை விட
உனக்கு பொருத்தமானவளாக
நான் இருப்பேன்
என்பதே உண்மை காதல் ...

என் காதலை!



யாருக்கும் தெரியாமல்
நெடுநாளாக
நெஞ்சுக்குள்
பொத்தி வைத்தேன்
என் காதலை!!!
உன்னிடம் மட்டுமே
முதலில் சொல்ல!!!
ஆனால் நீயோ,
ஊருக்கும்
சொல்லிவிட்டாய்
உலகிற்கும்
சொல்லிவிட்டாய்..
ஏனோ தெரியவில்லை?
என்னிடம் கூற
மட்டும்
இன்னுமென்ன
தயக்கம்
உனக்கு என்னவனே???

தேவை

தேவைப்படும் போது கிடைக்காத எதுவும்
தேவையில்லாத போது கிடைத்தால்
அதன் மதிப்பிழந்து போகும்

காதல்

போலி காதலில் வென்று
காலம் முழுவதும்
நிம்மதி இழந்து
வாழ்வதை விட
உண்மையான
காதல் தோல்வியுடன்
காலம் முழுக்க அந்த
நினைவுகளுடன்
தனித்து வாழ்வது மேல்....

மரங்கள்

ஆத்தங்கரை இல்லை
நம் தலைமுறைக்கு!!
கிணற்றடி இல்லை
இந்த தலைமுறைக்கு!!
குடிநீரே இல்லாமல்
போய்விடும்
அடுத்த தலைமுறைக்கு ???
மரங்கள்
இல்லாமல் போவதால்??