ஞாயிறு, 29 மார்ச், 2015

காதலும் கண்ணீரும்

கண்ணீரை நான் ரசித்தேன்
உனக்காக நான் அழும் போது 

அந்த கண்ணீரை நான் வெறுத்தேன் 
எனக்காக நீ அழும் போது 

அதே கண்ணீரில் நான் தவித்தேன்
இனி நீ  எனக்கு இல்லை
என்று  தெரிந்த போது ...

காதல் சுமை
காதல் மழை


நான்கு கால்கள்
ஒன்றாக நடக்க
இரண்டு இதயம் 
ஒன்றாக துடிக்க
மௌனம் மட்டுமே
 ஆட்சி செய்ய
நனையாதிருக்க உரசியும்
உரசாதிருக்க நனைந்தும்
அருகருகே நடக்கின்றோம்
ஒரு குடைக்கு கீழே ...