சனி, 23 மே, 2015

சில நொடிகள்


சில சந்தோஷங்கள்
சில நொடிகள் கூட
நிலைப்பதில்லை
நம் வாழ்க்கையில்
பல நூறு மடங்கு
வலிககளை வாரி
கொடுத்துவிட்டு
சென்றுவிடும்...

என் இதயம்எனக்காக துடிக்க பல
இதயங்கள் இருந்தும்
கூட உன் ஒரே ஒரு
இதயத்தின் துடிப்பிற்காக
ஏங்குகின்றது
என் இதயம்
அங்கே நீ மட்டுமே
வாசம் செய்து
கொண்டிருப்பதால்....

மௌன மொழி

பேசிய வார்த்தைகளை விட
பேசாத மௌன மொழிக்கே
வலிமையும் வலிகளும் அதிகம் ...

சென்னை டிராஃபிக்


சிக்கி சிக்கி சீரழிகின்றது
என்றென்றும் எழில் மிகு
சிங்காரச் சென்னை
இடியாப்ப சிக்கல்
டிராஃபிக்கில்
புகையும் புழுதியுமாக...

புதன், 20 மே, 2015

வர்ணங்களை பூசிக்கொண்டு நடிக்காதே


நீ 
நீயாக 
இரு....
மனிதா....
உறவுகாக
நட்புக்காக 
அன்பிற்காக
காதலுக்காக 
பணத்திற்காக
வாழ்க்கைக்காக
என எதற்காகவும் 
பலப்பல போலியான
வர்ணங்களை
பூசிக்கொண்டு 
நடிக்காதே
மனிதா......

மே 18


தமிழன் நான் தமிழன்
என்று மார்தட்டிக்
கொண்டால் போதாது
உணர்வு வேண்டும்
பாசம் வேண்டும் ...

என் அப்பாவி தமிழர் பலர்
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....

அவர்கள் அனைவரும்
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....

இன்றும் எனக்கு பாசம் 
அதிகம் தான் என் இலங்கை
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...

இந்த நாள் நான் பிரிந்த என்
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....

அன்பு பிச்சை


என்னை ஏளனமாக 
மட்டும் பார்த்து விடாதே
உன் அன்பை 
நான் பிச்சையாக
கேட்கிறேன் 
என்பதற்காக....

ஞாயிறு, 17 மே, 2015

இனிய காலை வணக்கம்


காலை கதிரவன் துள்ளி எழுந்து
வெண்மேகமும் நீலமேகமும்
ஓட்டப்பந்தயம் நடத்தி
வீசும் தென்றல் காற்று
உன்னை வருடி எழுப்புகிறது
நான் உனக்கு இனிய காலை வணக்கம் சொல்ல...

இனிய காலை வணக்கம் நண்பர்களே....

காதலன்நீராகி என்னை
அடித்து சென்றவனே

நிலமாகி என்னை
உன் இதயத்தில்
புதைத்தவனே

தென்றலாகி என்னை
மெதுவாக வருடியவனே

வானாகி என்னை உன்
பக்கம் வலைத்தவனே

தீயான உன் காதலால்
என் தனிமையை
சுட்டெரித்தவனே

இனி நீ இன்றி
நான் இல்லை....
உன் நினைப்பின்றி
என் வாழ்வும் இல்லை...

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

அன்பு
புரிந்துகொள்ள
முடியாதவர்கள்
மீது அன்பை
மழை போல
பொழிந்தாலும்
அதற்கு மதிப்பு
என்னவோ
சுழியம் தான்...

மிஞ்சி நிற்பது
வலிகளும்
வேதனைகளும்
தான்...

உங்கள் அன்பை இனி
புரிந்துகொள்பவர்களுக்கும்
புரிந்துகொள்ள
முயற்சிப்பவர்களுக்கு
மட்டுமே காட்டுங்கள்
அதன் மதிப்பு
அவர்களுக்கு
மட்டுமே தெரியும் ....


வாழ்க்கை


வயதும்
வாழ்க்கையும்
கடந்து விட்டால்
திரும்ப வராது
ரசித்து விடு
வாழும் போதே...

வலிகளை
மட்டும்
கொடுத்துவிடாதே...
உன்னை மட்டும்
அதிகமாக
விரும்பும்
இதயங்களுக்கு...

கல்லூரி


கலர் கலர்
கனவுகள்
எதிர்பார்ப்புகள்
ஆசைகளுடன்
தன் இலக்கை
நோக்கி நாம்
நம் முதல் அடி
வைக்கும் இடம்..

சீனியருக்கு பயந்து
பின்வாசல் வழி
நடப்பதும்
தலை நிமிராத
தளிர் நடையும்!!!

சின்னஞ்சிறு
புன்னகையுன் கூடிய
இரு இதழ்களும்
மௌன மொழியும்
என தொடரும்
வரவேற்பு நாள்
விருந்து வரை

சாதி மத நிற
பேதங்களை
கடந்த உலகம்
உயிர் நட்பு!!
அனைவருக்கும்
அமையும் இடம்...

கவலைகள் இல்லா
துள்ளித் திரியும் பருவம்
அரும்பு மீசையும்
குறும்பு காதல் என
முதல் காதல்!!!
துளிர்க்கும் இடம்..

மர நிழலில் அமர்வதும்
கேண்டீனில் அமர்வதும்
தான் மிக மிக அதிகம்
நம் வகுப்பறையின்
வாசத்தை விட !!!!!

கட்டடிப்பதும்
கடற்கரைக்கு செல்வதும்
திரையரங்கு செல்வதும்
கட்டி உருண்டு
சண்டை பிடிப்பதும்

அடுத்த நொடியே
கட்டிப்பிடித்து
அன்பை பொழிவதும்
இங்கு மட்டுமே
நடக்கும் புரியாத புதிர்!!

பிறந்த நாள்
கொண்டாட்டம்
அன்பளிப்பு .....
என மறக்கமுடியாத
இனிய நினைவுகளை
அள்ளித்தரும் இடம்..

ஓர் ஆண்டு படிப்பை
ஒரு நாளில் படித்து
தேர்வு எழுதி
அழகாக நாம்
வெற்றி பெறும் இடம்...

உலகத்தை நாம் பார்க்க
உலகமே நம்மை திரும்பி
பார்க்க வைத்த இடம் ....

இதுவே என் பசுமை மாறா
என் இனிய கல்லூரி ...

மேலே உள்ள அனைத்தும் கற்பனையே ..

என் வாழ்க்கைக்கும் இதற்கும்  90% தொடர்பு கிடையாது ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

நிலவுப் பெண்ணே


அடி நிலவுப் பெண்ணே
எனக்கும் ஆசை தான்
முழுமையாக உன்னை
ஒருமுறை ஏனும் நான்
வர்ணிக்கவேண்டும் என்று ...

ஒவ்வொரு முறையும் நான்
தோற்றுத்தான் போகிறேன்
உன்னிடம்...

உன் அழகை முழுமையாக
வர்ணிக்க முடியாமல்....

நண்பர்களே நீங்கள் முயற்சி செய்யுங்களேன்....

காலை வணக்கம்நம் மனதிற்கு
மிகவும் பிடித்தவர்கள்
காலை வணக்கம்
சொல்லாத போது தான்
தெரிகிறது அதன்
வலியும் வேதனையும்...

நம்மை பிடித்தவர்களுக்கு
நாம் சொல்லாத
போது தெரிவதில்லை
அந்த வலி... ..

இனிய காலை வணக்கம் நண்பர்களே....

புதன், 13 மே, 2015

காதல் கடிதங்கள்!!
நிலவுப் பெண்
கசக்கி எரிந்த

காதல்
கடிதங்கள்!!

அழகாக
மின்னுகின்றன!!

வான் முழுதும்
நட்சத்திரங்களாக.....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

நம் அன்பினால்
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
உள்ள தூரத்தில்
நாம்
இருந்தாலும்!!!
கண்களுக்கும்
இமைகளுக்கும்
உள்ள நெருக்கத்தை
நான்
உணர்கிறேன்
நம் அன்பினால்...


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

சனி, 9 மே, 2015

என் காதல் உன் காலடியில்


விலையில்லா பொருள் போல
மதிப்பில்லா பொருளானது
என் காதலும் உன் காலடியில்....

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்


அம்மா!!!
அ என்ற உயிர்
ம் என்ற மெய்
மா என்ற உயிர்மெய்
மூன்றும் சேர்ந்த
என் செம்மொழி அவள்..

என்றென்றும்
இனிமையான
இளமையான
பாச மலர்
ஈடு இணை இல்லா
நடமாடும் தெய்வம்...
அவளே என் தாய்....

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். ... உலகில் உள்ளஅனைவரின் அன்னையர்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

பாதுகாப்பான வாழ்க்கைவணக்கம் என் இனிய சகோ....

இப்பதிவை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு போட வேண்டி பதிவு ....

நான் கோவில் சென்ற போது என் உள் ஏற்பட்ட பாதிப்பு ....மகிழ்ச்சி ஆக இருந்தேன் சாமி தரிசனம் முடித்து ...ஒரு ஐந்து நிமிடங்கள் முன்னதாக நான் கோவிலை விட்டு கிளம்பி இருந்தால் நிச்சயமாக இந்த அவலம் என் கண்களில் பட்டு என் உள் பேர் இடியை இறக்கி இருக்காது .

தமிழக அரசின் அன்னதான திட்டத்தை நான் இது வரை சந்தோஷமாக வரவேற்தில்லை. காரணம் உழைக்கும் சிலரையும் சோம்பேறி ஆக்குகிறது என்ற எண்ணம்.அன்று நான் கண்ட காட்சி 100 பேர் என் கண் முன் மாண்டு போன வலியை கொடுத்தது.

அன்னதானம் தொடங்கும் நேரத்தில் மக்கள் தடுப்புகளை தாண்டி ஏரி வரிசையில் நிற்க தொடங்கினார்கள்.அப்போது ஒரு தாய் ....85 வயதுக்கு மேல் இருக்கும் ...

உடல் தளர்ந்து ...நடை தளர்ந்து ...வயதின் முதிர்ச்சி உடலின் கோடுகளாய்....உடல் நடுங்குகின்றது அந்த தாய்க்கு ...நடக்கவும் முடியாமல் அந்த வரிசையில் வந்து நின்றார் ...அந்த கொடிய தருணத்தை காணும் அவஸ்தை இனி என் வாழ்க்கையில் மீண்டும் ஏற்படக்கூடாது ....அய்யகோ நான் துடித்து விட்டேன் ....அந்த நிமிடம் என்னால் என் கண்கள் & இதயத்தில் வழிந்ததை நீரை கட்டுபடுத்த முடியவில்லை .

குடும்பம் கைவிட்ட நிலையில் தனியாக இருக்கும் இது போன்ற வயதானவர்ககளுக்கு அரசு இருப்பிடம் அமைத்து கொடுத்து உணவு கொடுத்து அவர்களை பாதுகாப்பான வாழ்க்கை வாழ வைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும்.அது போல இருப்பிடங்களை மக்கள் எளிதாக அறிந்து கொண்டு தான் பார்க்கும் ஆதரவற்றோரை அந்த இடங்களில் கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் .....

என் இதயத்தில் பச்சைஉன் நிழற்படத்தை
அழித்து விட்டேன்....
ஆனால் என் மனதில்
இருக்கும் உன்
நிஜ பிம்பத்தை
அழிக்க
முடியவில்லை!!!
என் இதயத்தில்
பச்சை குத்தி
இருப்பதால் ...


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

வியாழன், 7 மே, 2015

அழகுபெண்களின் அழகை
மட்டுமே ரசிக்கும்
ஆண்களுக்கு மத்தியில்
அன்பை மட்டும்
எதிர்பார்க்கும் ஆணை
தேடி தேடி களைத்து தான்
போகிறாள்
ஒவ்வொரு பெண்ணும் !!!!!

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

செவ்வாய், 5 மே, 2015

காதல்கனவென்று நான் நினைக்க
காதலென்று நீ உரைக்க
காதலை நான் உணர்ந்து
காதலில் மெய் மறக்க
நிழலாகி மறைந்து போனாய்
என்னையும் என் காதலையும்
தனியாக தவிக்கவிட்டு....


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

ஞாயிறு, 3 மே, 2015

மழை


சுட்டெரிக்கும் சூரியனே
கொஞ்சம் கருணை காட்டு
சில்லென்ற மழைத்துளியே
கொஞ்சம் கருணை காட்டு!!

கொடிய வெப்பம் தவிர்க்க
பூமி அன்னை மடி குளிர
செடி கொடிகள் தழைக்க
பலன் பல தரும் மரங்கள் சிரிக்க

உயிர்களின் தாகம் தீர்க்கும்
ஏரி குளம் ஆறுகள் நிரைய
வறட்சி போக்கி வளம் கொடுக்க
விவசாயிகளின் துயர் போக்க

ஆங்காங்கே மிதமானது
முதல் பலத்த மழை பெய்து
மக்கள் முதல் மாக்கள் வரை
உலகின் அனைத்து உயிர்களின்

மனங்கள் குளிர்ந்து உன்னை
வாழ்த்த ஓடோடி வந்துவிடு
விண்ணை விட்டு மண்ணுக்கு
என் செல்ல மழையே!!!

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

சனி, 2 மே, 2015

நட்பு காதல்


நட்பு காதல்
இரண்டுக்கும் நடுவில்
ஒரு மெல்லிய கோடு!!!

நண்பர்கள் பலருக்கு
அன்பை கொட்டி
கொட்டி கொடுப்பது
நட்பு ....

ஒருவர் மீது மட்டுமே
அன்பை கொட்டி
கொட்டி கொடுத்தாலும்
திரும்ப திரும்ப
எதிர்பார்ப்பது காதல்...

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

உண்மை இல்லை


நட்பிலும் உண்மை இல்லை
காதலிலும் உண்மை இல்லை
உறவிலும் உண்மை இல்லை
உணர்விலும் உண்மை இல்லை
பாசத்திலும் உண்மை இல்லை
வேஷத்திலும் உண்மை இல்லை
அன்பிலும் உண்மை இல்லை
வெறுப்பிலும் உண்மை இல்லை
கோவத்திலும் உண்மை இல்லை
குணத்திலும் உண்மை இல்லை
உன்னிடம் உண்மை இல்லை
என்னிடம் உண்மை இல்லை
உலகிலும் உண்மை இல்லை
இல்லவே இல்லை ....