வியாழன், 18 ஜூன், 2015

என் செல்ல மனைவி.

காலை கதிரவனுக்கு 
போட்டியாய் 
கண்விழித்து நீ எழுந்து .........
வாசலில் அழகு கோலமிட்டு
விரைவாக காலை பணி முடித்து
என்னை எழுப்பி என் தேவை அறிந்து
பணிவிடை செய்து அனுப்பி வைப்பாய்

பணி நிமிர்த்தம் பல இடம் சென்றாலும்
கையில் உணவுடனே அனுப்பி வைப்பாய்
என்னை அன்புடனே காதலுடன்

மணிக்கொருமுறை எனக்கு உன் நினைப்பு
உனக்கோ நாள் முழுதும் என் துடிப்பு

பணி பல முடித்து கலைப்புடன்
நம் மனை திரும்ப
என் வரவை எதிர்பார்த்து
உண்ணாமல் உறங்காமல்
வழிமேல் விழிவைத்து வீற்றிருக்க
உன் விழி பார்த்த உடன்

என் பணி சுமையும்
என் கலைப்பும்
என்னை விட்டு நீங்கி ஓடுமே
என் செல்ல மனைவி....

வாழ்கின்றோம் காதலுடனே


உன் விழி பார்க்கவில்லை
உன் முகம் பார்க்கவில்லை
உன் நிறம் பார்க்கவில்லை
உன் உரு பார்க்கவில்லை

உன் எழுத்துக்களை பார்த்தேன்
உன் குணத்தை அறிந்தேன்
உன் இனிய குரலை கேட்டேன்
உன் மொழியை ரசித்தேன்

உன் அன்பு மழையில் நனைந்து
உன் மன காதலை அறிந்து
என் மன காதலை உணர்ந்து
நம் காதலால் இணைந்து
அன்பினை உணர்ந்து
வாழ்கின்றோம் நம் காதலுடனே.

புரிதல்


புரிந்து கொண்டு பிரிந்து
செல்வதை விட
புரிதல் இல்லாமல் பிரிந்து
செல்வது மேல்...

உலக நாடக மேடை


நடிக்க தெரிந்தவனுக்கு உலகம்
அழகான நாடக மேடை
நடிக்க தெரியாதவனுக்கு உலகம்
நரகத்தின் மேடை....

உன் காதல் நினைவுடனே..


துடிக்காத இதயத்தை துடிக்க வைத்தாய்
பேசாத இதழ்களை பேச வைத்தாய்
ரசிக்காத உலகத்தை ரசிக்க வைத்தாய்
உணராத பெண்மையை உணர வைத்தாய்
உறங்காத இரவுகளை பரிசளித்தாய்
உன் நினைவுடனே எப்பொழுதும் வாழவைத்தாய்.....

அருமை பெருமை


இருக்கும் போது தெரிவதில்லை 
அருமை 
இல்லாத போது தான் தெரிகிறது 
பெருமை......

காதல் இசை


கடிகார முள்ளும்
தன் துடிப்பை
நிருத்திவிட்டு
கேட்டு ரசிக்கின்றது
நம் இரு இதயங்களின்
காதல் இசையை ...

மௌன மொழி


கொடிய வார்த்தைகளை விட
பேசாத மௌன மொழியே
அதிக வலிகளை தரும்...

காதல் தூது போக


என் காதலை சொல்ல வந்தேன்
உன்னிடம்
உன் காதலை என்னிடம்
சொன்னாய்
தூது போக சொல்லி......

புதன், 17 ஜூன், 2015

உன் காதல் நினைவுடனே


நிலையாமை இல்லாத இவ் உலகில்
நிலையானது நமது காதல் என்ற
நிலைப்பாடுடன் நிலைப்படியில்
நிலைமாறின்றி நினைவிழந்து
நிற்கின்றேன் உன் நினைவுடனே....

முடிவு


சரியாக யோசிக்கிறோம்
என்று தவறாகவும்
தவறாக யோசிக்கின்றோம்
என்று சரியாகவும்
முடிவெடுத்து
முட்டி மோதி
தவிக்கின்றோம்...

பெண்மையை போற்றுவோம்உன்னை தன் கருவில் சுமந்து
உலகிற்கு ஈன்ற உன் அன்னை
பெண்ணே

உன் கருவை சுமந்து
உன் மழலையை பெற்றவள்
பெண்ணே


உன் குலம் தழைக்க வைக்க
வாரிசை சுமக்கும் மருமகள்
பெண்ணே

மாமா என்ற அற்புத பதவியை
உனக்கு தரும் உன் சகோதரி
பெண்ணே

உனக்காக உன் இறுதி நாளில்
கதறி அழப்போகும் உன் மகளும்
பெண்ணே

பெண்ணை சுற்றியே உன் உலகம்
இருக்க
உயிராக போற்றப்பட வேண்டிய
பெண்மையை போற்றுவோம்...

அநாதை இல்லை


உலகில் யாரும்
அநாதை இல்லை
உலகின் கடைசி
இதயம் துடிக்கும் வரை....

இனிய காலை வணக்கம்


இனிமையான காலையிலே
தித்திக்கும் நேரத்திலே
திகட்டாத செந்தமிழிலே
சுவையான சொல்லினிலே
சொல்கின்றேன்.....
என் உயிர் நட்புகளுக்கு
இனிய காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ....

என் கைபேசி


கொஞ்ச நேரம்
என் பிஞ்சு விரல்களின்
ஸ்பரிசம் கிடைக்காததால்
தன் கண்ணீரில்
நினைந்து நினைந்து
உயிரிழந்து விட்டது
என் கைபேசி....

ஒரு முத்தம்ஒரே ஒரு முத்தம் தானடி
உன்னை கேட்டேன்
நீ வெட்கப்பட்டு
ஓடி மறைந்தாய்
என என் உள்ளம் நினைக்க,

நீயோ
முழுவதுமாக காதலை
வெட்டி விட்டு
விலகிச்சென்றாய்,

விதியே என நான்
என் மதியை நொந்து,
வீழ்ந்து கிடக்கின்றேன்
வீதியிலே
உன் நினைவுடனே.....

காதல் சுகமேசுகமே சுகமே
காதல் என்றும் சுகமே
இப்பொழுதும் சுகமே
எப்பொழுதும் சுகமே
முப்பொழுதும் சுகமே

நினைவினில் சுகமே
கனவினில் சுகமே
நிஜத்திலும் சுகமே

உன் அருகினில் சுகமே
உன் அன்பினில் சுகமே
உன் பேச்சினில் சுகமே
உன் மூச்சனில் சுகமே
உன் அனைப்பில் சுகமே

சுகமே சுகமே
காதல் என்றும் சுகமே....

முகப்புத்தக்கம்


படிக்க படிக்க பிடிக்கும் புத்தகம்
முகப்புத்தக்கம்
பார்க்காமல் படிக்காமல் இருக்க
முடிவதில்லையே!!!

சின்னஞ்சிறு புன்னகை


உலக இன்பங்கள் அனைத்தும்
ஒரே நொடியில் கிடைத்தாலும்
அது உன் அழகிய சின்னஞ்சிறு
புன்னகைக்கு ஈடாகாது.....

நிழலாகி உன்னை பின் தொடர்வேன்


நிழலாகி உன்னை பின்
தொடர்வேன்
நிஜமாக என்னை நீ நெருங்க
விடாதபோதும்.....

உயிரின் உயிராக.


உயிராக உன்னை நினைத்து
உணர்வாக உன்னை மதித்து
உறவாக உன்னை ஏற்றேன்
என் உயிரின் உயிராக.....

சனி, 6 ஜூன், 2015

உலகிற்கு ஒளி கொடுத்து விடு


காலை கதிரவன் துள்ளி எழ 
காத்திருக்கின்றான்
உன் இரு விழிகளின் கடைக்கண் 
பார்வைக்கு
உன் விழி திறந்து ஆதவனுக்கு
வழி கொடுத்து
உலகிற்கு ஒளி கொடுத்து விடு....

இரு விழி அழகு


நீ ஆழ்ந்து உறங்கும் நேரங்களிலும்
நான் உறங்காமல் உறங்கும்
உன் இரு விழி அழகை
கண் இமைக்காமல்
பார்த்து பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கின்றேன்...

வியாழன், 4 ஜூன், 2015

என் நெஞ்சம்எதையும் 
யாரிடமும்
எதிர்பார்க்க 
நினைக்கா
என் நெஞ்சம் 

உன்னிடம் மட்டும்
அன்பை
எதிர்பார்த்து
எதிர்பார்த்து
ஏமாந்து தான்
போகின்றது ..

இந்த ஏமாற்றம்
இந்த வலி
அதற்கும் பிடித்தே
இருக்கின்றது
என்னை போன்றே .....

நெருக்கம் இல்லாமல் போனதேன்


தூரத்தில் நாம் இருந்த போது 
இருந்த நெருக்கம் கூட 
மிக மிக அருகில் வந்த 
பிறகு இல்லாமல் போனதேன் ...

காதலன் காதலி கணவன் மனைவிகாதலனாக நீ இருக்க
காதலியாக நான் இருக்க

காதலன் கணவன் ஆனாலும்
காதலி மனைவி ஆனாலும்

நம் காதல் காதலாக
இருப்பதனால்
நம் அன்பு தூயதாக
இருப்பதினால்

உனக்காக நானும்
எனக்காக நீயும்
நமக்காக நம் காதலும்
துடித்துக் கொண்டிருப்பதால்

அன்போடு காதலோடு பண்போடு
வாழ்வோம் பல்லாண்டு
என்றென்றும் காதலராக...

சின்னஞ்சிறு இதயம்


என்
சின்னஞ்சிறு
இதயம் கூட
ஏனோ
மலை அளவு
கனக்கின்றது...

நீ என்னை
விட்டு
விலகி விலகி
செல்வதால்
அல்ல.....

என் காதலை
தவிக்க
விட்டு செல்வதால்..

காதல் நினைவாகநமக்காக நம் மணம்
சுமந்த காதலை
நீ தூக்கி எரிந்து
என்னையும்
தூக்கி எரிந்தாய்

நம் காதலுக்காக
நான் சுமக்கும்
நம் சிசுவை
நான் சுமக்கிறேன்
இன்று
நம் காதல் பரிசாக....

சுமப்பேன் இறுதிவரை
என் உயிரின் உயிராக...
இறுதி மூச்சு உள்ள வரை
நம் காதல் நினைவாக
என் உறவாக ....

நீயே நீயே இனி எல்லாம் நீயே....


என் கனவிலும் நீயே
என் நினைவிலும் நீயே
என் உயிரிலும் நீயே
என் உணர்விலும் நீயே
என் காதலும் நீயே
என் காதலனும் நீயே
என் இதயக்கூட்டில்
காதலை
விதைத்தவன் நீயே
ஒரு காவியமாய்
அழகு ஓவியமாய்
என் உள் நுழைந்தவன் நீயே
நீயே நீயே
இனி
எல்லாம் நீயே....

நித்திரை


நித்தம் நித்தம் உன்னை
நினைத்து நினைத்து
என் நித்திரை அறையில்
துயில் கொள்வதால்
என் நித்திரையின்
நீளம் குறுகி குறுகி
என் இனிய இரவு
நீள்கிறது
உன் நினைவுடனே.

அருகாமை & அன்பின் ஆழம்


உன் அருகாமை
இல்லாத போது தான்
முழுவதுமாக
உணர்கிறேன்...
உன் பாசமும்
நம் நேசமும்
நமது அன்பின் ஆழமும் ....

வாழ்க்கை போராட்டம்


போராடி போராடி தோற்பதில்லை
வாழ்க்கை
நமது போராட்டத்திற்கான களமே
வாழ்க்கை...

இனிமையான வாழ்க்கை


துகள் அளவு மகிழ்ச்சியை
மலையளவும்
மலையளவு கஷ்டத்தை
துகள் அளவும்
எடுத்துக்கொள்ள மனம்
இருந்தால் உன் வாழ்க்கை
இனிமையானதே ....