புதன், 29 ஜூலை, 2015

கலாம் நம் பாரத தாய் பெற்ற செல்ல பிள்ளைகலாம் நம் பாரத தாய் பெற்ற செல்ல பிள்ளை...நல்ல பிள்ளை ....

தாய்க்கும் தாய்நாட்டுக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் பெறும் முன்னேற்த்தை ஏற்படுத்தி தன் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் நல்ல நல்ல கருத்துக்களை எடுத்து கூறி நல்ல வழிகாட்டியாகவும் மாணவர்களின் அறிவு கண்ணை திறந்து மாணவர்களின் முன்னோடியாக வாழ்ந்த மா மனிதர்.

இந்தியா வல்லரசு நாடாக ஆசைப்பட்டார் . வளர்ந்த இந்தியாவை உருவாக்க மாணவர்களால் முடியும் என்று இளைய சமுதாயத்தின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

அரிய பல பொன் மொழிகள் மூலமாக ஊக்கத்தை விதைத்தவர். கனவு காண சொன்னார் ஆம் அதை கருத்தாய் காண சொன்னார்.

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னவாக பிறக்க ஆசை என்ற கேள்விக்கு அப்துல் கலாம் அவர்கள் எனக்கு மறு ஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை அப்படி இருந்தால் நாம் இப்போது இந்தியாவை வளர்ந்த நாடாக்க முயற்சிக்கிறோம். எனக்கு இந்தியாவில் மட்டுமே பிறக்க ஆசை. அதுவும் வளர்ந்த இந்தியாவில் பிறக்க ஆசை என்றார் ...

அவரின் கனவான வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் நமது மொத்த சக்தியை பயன்படுத்தி நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் .

இதுவே நாம் நம் மா மனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை...

கலாம்


கலாம் பொன் மொழிகள்


நமது பிறப்பு
ஒரு சம்பவமாக இருக்கலாம்...
ஆனால், நமது இறப்பு
ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...

கலாம்


கலாம்


மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னவாக பிறக்க ஆசை என்ற கேள்விக்கு அப்துல் கலாம் அவர்கள்
இந்தியாவை வளர்ந்த நாடாக்க முயற்சிக்கிறோம்.
எனக்கு இந்தியாவில் மட்டுமே பிறக்க ஆசை.
அதுவும் வளர்ந்த இந்தியாவில் பிறக்க ஆசை என்றார் ...

கலாம்

கனவு காண சொல்லித் தந்த கலாம்
பல கோடி மாணவர்களின் முன்னோடி கலாம்...
நான் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து
 மதிக்கும் மாபெரும் நல்ல மனிதர் அப்துல் கலாம் அவர்கள் ......
கண்கள் கலங்கி இதயம் தவிக்கின்றது...
இந்தியாவின் நம்பிக்கை ...
இந்தியர்களின் நம்பிக்கை ....
மாணவர்களின் வழிகாட்டி ...
இதயம் என்ற ஒன்றை ஆண்டவன் ஏன் படைத்தான் இதற்காக தானா...
இதயம் வலித்தது அங்கே ...
இதயம் வலிக்கிறது இங்கே ...


கனவு


கனவுகளை தொலைத்து விடாதே
கற்பனையில் உழன்று விடாதே
கனவு கை கூட காலம் வரும் என
காத்திருக்காதே!!
எதிர்பார்த்திருக்காதே !!
கடமையை கச்சிதமாக செய்
கனவு இனிதாக நிறைவேறும்

விடியல்


விடியல் அழகான விடியல்!!!
இருள் நீக்கும் விடியல்...
தணலாக தகிக்கும் சூரியன்,
அழகாய் சிரிக்கும் விடியல்;
புது பெண் போல பகலவன்
வெட்கி சிவக்கும் விடியல்..
மொட்டுகள் மணமோடு,
மலராக பூக்கும் விடியல்..
அமைதியின் விடியல்
அழகான விடியல்....
தினமொரு விடியல்
புது புது விடியல்...
வெற்றியை வெள்ள
புதிதாய் பிறந்த விடியல்....

விடியல் இனிதாகட்டும்....
இந்த நாளும் இனிதாகட்டும்..
இனிய காலை வணக்கம் நட்புகளே....

உறக்கம்உறக்கம் இன்றி தவிக்கின்றேன்
உறங்கத் தானே விழைகிறேன்

உடலும் சோர்ந்து விட்டது
உளமும் சோர்ந்து விட்டது

உணரவில்லை என் மனம்
உறங்க விடவில்லையே

உலகம் உறங்கி விட்டது
உறவும் உறங்கி விட்டது

உயிரும் கூட உறக்கத்aதை
உடைமையாக்க துடிக்கிறது

உலகை மறக்க நினைக்கிறேன்
உன் நினைவு தானே வாட்டுது

உறக்கம் இன்றி தவிக்கின்றேன்
உறவாய் உன்னை நினைக்கிறேன்

உறங்க வரம் தர வேண்டி வேண்டி
உன்னை நான் யாசிக்கின்றேன்

உன்னை மட்டும் தானே நேசிக்கிறேன்
உண்மையில் உன்னை சுவாசிக்கிறேன்

உணர வேண்டும் இதை நீ மனமார
உன் உறவாக வேண்டும் நான் உளமார

உடன் என் மனமம் உறங்குமே
உன் நினைவுடன் உருகிடுமே....

காலமெல்லாம் காத்திருந்தேன்

காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலை காக்க விட்டேன்
கனவில் கண்ட என் கணவன்
கண் முன்னே வருவான் என
கண் இமை இமைக்காமல்
கண் தூக்கம் இல்லாமல்
காட்டாறு வெள்ளமென ஓட
காத்திருக்கும் அன்பையும்
கட்டுக்கடங்கா காதலையும்
காட்ட துடிக்கும் ஆசையையும்
கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி
கலங்கி காலங்கள் கழிக்கிறேன்...

பார்வை


 
நீ பார்க்கும் ஒற்றை பார்வையும்
என்னை ஆயிரம் ஆயிரம்
கேள்விகள் கேட்கும் அடுக்கடுக்காய்
நீ வாய் திறந்து கேட்காவிடினும் ....

மனிதர்கள்

முகங்களை மாற்றி கொண்டே
இருக்கிறார்களே மனிதர்கள்
தினம் தினம் முகநூலிலும் கூட??
 

இனிய காலை வணக்கம்அழகிய மலர்கள் போல
உங்களின் வாழ்க்கையும்
இந்த நாளும்
இனிமையாக அழகாக
மணம் வீசட்டும்....


இனிய காலை வணக்கம்

தேடி

நீ என் அருகேயே இருக்க
வெட்கத்தில் உன்னை
காண தவிர்த்த என் கண்கள்,
நீ என்னை விட்டு விலகிய பின்
உன்னை தேடி தேடி
கண்ணீரில் தவிக்கின்றன...

காத்திருப்பு

நம்மிடையே
யாரும் வேண்டாம்
என்ற எண்ணத்தை
தவிடு பொடியாக்கி
நமக்கிடையே வரும்
ஒரு அற்புத ஜீவன்
வருகைக்காக
காத்திருக்கும்
காத்திருப்பு ...

விரலோடு விரல் இணைந்து

விரலோடு விரல் இணைந்து
கரமோடு கரம் உரசி
விழியோடு விழி பேசி
துன்பங்கள் தொலைத்து
இன்பத்தில் திளைத்து
இன்முகத்தோடும்
மகிழ்ச்சியோடும்
அடி மேல் அடி வைத்து
அழகாக நடை போட்ட
அந்த அற்புத நாட்கள் ...

இதயம்

இதயம் இதயம் இணைந்து
இதய மாற்றம் நடந்து
இருவர் உயிரும் கலந்த
இன்ப வாழ்வே இனிக்கும்....

மொபைல் டேடா

Kb ஆக Use பண்ணிணாலும்
எம்மி எம்பி Mb ஆகவும்
ஜிம்மி ஜிம்பி Gb ஆகவும்
மொபைல் டேடா காணாமல் போகுதே...

வலி


வலிகளை ரசிக்க தொடங்கி விட்டேன்
அவை எனக்கு சொந்தமென
வேதனையை ருசிக்க தொடங்கி விட்டேன்
இவை எனக்கு நிலையானவை என....

காதலுடன் காதலுக்காக ...


நேற்றைய சுகம்
முழுவதும் இன்று
சோகமாகி போனது

நேற்று உறக்கம்
தொலைத்தேன்
மகிழ்ச்சியில்...

இன்று உறக்கம்
தொலைப்பேன்
துக்கத்தில்....

காத்திருப்பேன்
காதலுடன்
காதலுக்காக ...

சுட்டெரிக்கும் சூரியன்

சுட்டெரிக்கும் சூரியனை
கையால் பிடித்தேன்...
சுடவில்லை என்னை!!
என் காதலின் குளிர்ச்சியில்
குளிர்ந்து போனான்....

நட்பு

நம்மை மதிக்கும் நல்ல நட்பை விட்டு
நாம் மதிக்கும் நட்பை தேடி தேடி
நாம் பல நேரம் பயணக்கிறோம்
நாம் உதாசீன படுத்தப்பட்டாலும்....

இதயம்

இதழ் உரைத்த வார்த்தைகளை நம்பாதே
 இதயம் உதிர்க்கும் வார்த்தைகளை நம்பு 
இதழ் பொய் உரைத்தாலும், 
இதயம் மெய் உரைக்கும் ....

முகநூலில் முகங்கள்

முகநூலில் எத்தனை எத்தனை முகங்கள்
முகம் காணா முகங்கள் பல விதங்களில்
முகம் காண துடிக்கும் உறவுகள் ஒரு சில

காதல்
பயந்து ஒதுங்கி நின்றேன்
பதற்றமும் பட படப்புமாய்

உன்னை பார்த்து அல்ல,
உன் அன்பை பார்த்து ...

எங்கே காதல் உன் வழியில்
என்னை தொட்டு விடுமோ??

என்ற அச்சமே பயமாக
என்னை ஓடச் செய்ய, 

காதலென நீ துறத்த
காதலை நான் வெறுக்க,

நீ என்னை விடாமல் துறத்த,
நீ என்னை வெறுக்க, நான் நடிக்க

கோடி முறை நீ என்னை தொடர
கோபத்தை உன் மேல் கொட்ட

இடைவெளி விட்டு நீ தொடர்ந்து
இதய காதலை வெறுத்த என்னை

உன் உண்மையான அன்பினால்
விழவைத்தாய் காதலில் ...

காதல் ராஜா ரோஜா


ரோஜாக்களுக்கு இடையே
நிற்கின்றான் என் காதல் ராஜா....
ரோஜாக்களுக்கு மணம் அளித்து கொண்டு ..

காதல்

கண்கள் பேச
கரங்கள் இணைய

இதயம் பட படக்க
இதழ் துடிக்க...

காதல் பிறக்க..
காதலர்களாவோம்..


உயிர்


உலகமே என்னை எதிர்த்தாலும்
உன் கரம் பிடிக்க துணிவேன்....
உன் இதயம் என்னை வெறுத்தால்,
உயிர் விடவும் துணிவேன்..

தீ


கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை 16ஆம் தேதி

தீ விபத்தில்
தீ சுவாலையில்
தீயில் கருகி
தீக்கிறையான
94 தீபங்களின்
11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...

இனி இப்படியொரு சம்பவம் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் பிரார்த்திப்போம்.....

காதல்


காதல் காதல்
காதல் காதல்

எங்கும் காதல்
எதிலும் காதல்

சொல்லிய காதல்
சொல்லா காதல்

ஒரு வரி காதல்
ஒருதலை காதல்

இருபக்க காதல்
இதய காதல்

நன்மை காதல்
நல்ல காதல்

உண்மை காதல்
உன்னத காதல்

உணர்வு காதல்
உயிர் காதல்

இனியது காதல்
அரியது காதல்

வாழ்க காதல்
வாழ்க காதலர்கள்

உலகமும் உயிர்களும்
உள்ளவரை வாழ்க வாழ்க...I

செவ்வாய், 14 ஜூலை, 2015

இதழ் இதயம்இதழுடன்
இதழ் சேர்த்து
இணைந்தோம்!!

இணைந்தது,
இடம் மாறியது,
இதழ் மட்டுமல்ல...

இதழ்களுடன்
இருவரின்
இதயமும் தான் ...
.

மழைகொஞ்சும் தூரலாய்
சில்லென்ற சாரலாய்
சிலிர்க்க வைத்தாய்

துளி துளி தூரலாய்
குளிர்விக்கும் சாரலாய்
கொட்டும் மழையாய்
விளையாடினாய்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாய்
அழகு நேர் கோடுகள்
கோடி கோடியாய்

முத்தமாக மகிழ்வித்தாய்
மொத்தமாக மகிழ்வித்தாய்

நட்பு

ஆதியில் வந்தாலும் சரி
பாதியில் வந்தாலும் சரி
இடையில் விட்டு விடாதே
உயிரினும் மேலான நட்பை.....


சூரியனின் பல பெயர்கள் இனிய காலை வணக்கம் ...சூரியனின் பல பெயர்கள்

1) அகில சாட்சி
2) அண்டயோனி
3) அரியமா
4) அரிகிரணன்
5) அருக்கன்
6) அருணன்
7) அலரி
8) அழலவன்
9) அனலி
10) ஆதவன்
11) ஆதித்தன்
12) ஆயிரஞ்சோதி
13) இரவி
14) இருள் வலி
15) இனன்
16) உதயன்
17) எல்
18) எல்லை
19) ஏழ்பரியோன்
20) ஒளியோன்
21) கதிரவன்
22) கன்ஒளி
23) கனலி
24) சண்டன்
25) சித்திரபானு
26) சுடரோன்
27) சூரன்
28) சூரியன்
29) செங்கதிரோன்
30) சோதி
31) ஞாயிறு
32) தபனன்
33) தரணி சான்றோன்
34) திவாகரன்
35) தினகரன்
36) தினமணி
37) நபோமணி
38) பகல்
39) பகலோன்
40) பங்கயன்
41) பதங்கன்
42) பரிதி
43) பருக்கன்
44) பனிப்பகை
45) பானு
46) மார்த்தாண்டன்
47) மித்திரன்
48) மாலி
49) விகத்தன்
50) விண்மணி
51) விரிச்சி
52) விரோசனன்
53) வெஞ்சுடர்
54) வெய்யோன்
55) வெயில்

சோதி சுடரில்
உதயன் உதயமாகி
காலை கதிரவன் சிரிக்க
இருள் வலி இருளை நீக்க
ஆதவன் ஆசிர்வதிக்க
பகல் பளபளக்க
ஞாயிறு நாளான இன்று
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம் ....

காதல் நினைவு


நினைத்து நினைத்து
நின் நினைவில்…,
நினைந்து நினைந்து
என் கனவில்…,
நினைக்க நினைக்க இனிக்கும்…!
நின் காதல் நினைவுகளில்…,
நினைவிழந்து; நிலையிழந்து, நிற்கின்றேன்…!
உன் நினைவுடனே நாளும்…!!

என் காதல்இரவின் மடியில் நிலவை 
காதலித்து தோற்று பின்,
காலை கதிரவனையும்
காதலிக்க நினைத்து
உறங்கி விழிக்க,
சுட்டெரிக்கும்
கதிரவனின் தணலில்
எரிந்து சாம்பலானது
என் காதல்..

வெள்ளி, 10 ஜூலை, 2015

காதல் புதிதே


காலம் காலாமாக பலர் காதலை
ரசித்தாலும்
உனக்கும் எனக்கும் காதல் புதிதே
என்றென்றும்....

அம்மாநீ பசிக்கிறது
என்று நாலு முறை
சொன்னால் தான்
சோறு போடு வா
மனைவி...

பசிக்கிறது
என்று நீ நினைக்க
ஆரம்பிக்கும் முன்
தட்டில் சோறோடு
வந்து நிற்பவள் அம்மா....

இதய சிறை

என்னவன்
தும்மலாகாது
என அவன்
நினைவுகளை
நொடிகள் தோறும்
சிறை பிடிக்கிறேன்
என் இதயகூட்டிற்குள்....


பறவை செல்பி

பறவைக்கும் செல்பி எடுக்க ஆசை
பல்லைக் காட்டிக்கொண்டு
தன்னைத் தானே தன் கைகளால்
போட்டோ பிடிக்கிறது ....

நிஜம் நிழல்

நிஜம் எது நிழல் எது என்று உணராமல்
ஓடிக்கொண்டே இருக்காதே !!!
நிழல் ஒரு நாள் உன் இரு விழிகளையும்
ஏமாற்றி விட்டு ஓடி மறைந்து விடும்....


Snacks and Sweets

Snacks and Sweets சாப்பிட்டு
சாப்பிட்டு குண்டாவதை விட
சாப்பிடாமல் Lean அ
Sweet அ இருப்பது மேல்....

அன்புபாசமும் நேசமும் அளவாக
இருந்தால் தோஷமில்லை

நட்போ காதலோ உறவாக
உன் உள்ளே புகுந்துவிட்டு

உயிரின் உயிராக உணர்வாக
உயிருடன் கலந்துவிட்டால்

பிரிக்க நினைத்தாலும்
அழிக்க நினைத்தாலும்

அழிவது அன்பு அல்ல
அழிவது உயிரும் உடலுமே..

திருமணம்இரு அன்பு உள்ளங்கள்
இணையும் திருமணம்

அதற்காக காத்திருக்கு
அதை நோக்கி என் மனம்

என் மணவாளனின் வரவை
எதிர் நோக்கி என் விழிகள்

வழி மேல் விழி வைத்து
வீற்றிருந்து காத்திருந்து

கலைவது நாட்களும்
காலமும் மட்டுமல்ல

என் கனவுடன் கூடிய
என் ஆசையும்

என் இளமையுடன் கூடிய
என் காதலும் ..

திங்கள், 6 ஜூலை, 2015

ஒரு வார்த்தை

நமக்கு பிடித்தவர்களிடம்
ஆயிரம் வார்த்தைகள் பேசுவதை விட
நம்மை பிடித்தவர்களிடம்
ஒரு வார்த்தை பேசுவதே சிறந்தது...


புன்னகை


பொன்நகை தேவையில்லை எனக்கு
உன் புன்னகை ஒன்றே போதும்
நம் அன்பு பரிசாக.....

உயிர்மரிக்கின்ற எண்ணம் எனக்கில்லை இன்று
மரிக்கின்ற தருணம் வரும் வேலை உண்டு
நான் மடி சாய வேண்டும் உன் மடி மீது அன்று

என் துடிக்கின்ற இதயம் உன் மடி மீது போக
உயிர் பிரியும் முன்னே உன் முகம் காண வேண்டும்
விழி மூடும் முன்னே உன் விழி காண வேண்டும்

கேட்கின்ற குரல்கள் உனதாக வேண்டும்
மொழிகின்ற வார்த்தை உன் பெயராக வேண்டும்
விடுகின்ற மூச்சும் உன் நினைவாக வேண்டும்

வெற்றி தோல்விதோல்வியை கண்டு துவளாதே
தோற்றவுடன் மனம் வெதும்பாதே
வெற்றியை கண்டு வியக்காதே
உடனே வேடம் பூனாதே

தோல்வியே வெற்றியின் முதல் அடி
வெற்றியே வாழ்க்கையின் முதல் படி
அடி மேல் அடி வைப்பதே வாழ்க்கை
படி படியாக முன்னேறு வாழ்க்கையில்

வெற்றியும் உனதே
தோல்வியும் உனதே
இரண்டும் ஒன்றே
என்பதை நீ மறவாதே ....

விரோதிஇன்று என் உறக்கத்திற்க்கும் கூட
நான் விரோதியாகி விட்டானோ???

என் கண்களும் மனதும் என்னை உறங்கவிடாமல்
என்னுடன் பேசிக் கொண்டே இருக்கின்றன....

இன்பம்


பெறுவதில் இல்லை இன்பம்
தருவதில் தான் எத்தனை எத்தனை இன்பம்
கொஞ்சம் தந்து தான் பாருங்களேன்
அன்பையும் மகிழ்ச்சியையும் பிறருக்கு .....