ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தூக்கு கயிறு


உன் இரு விழி அழகில் விழுந்து 
உன் காதலினால் கவரப்பட்டு 
உன் மன அழகில் மயங்கி 
உன் மன சிறையில்
உன் நினைவில் வாழ்ந்த

என் மகிழ்ச்சியை நீ பறித்து என்னை 
உன் மனதிலிருந்து விடுவித்து
நம் காதலின் பரிசாக என் உயிரை 
உன் இதயத்தில் தூக்கிலிட்டு

உன் திருமணத்தில் மணவறையில்
உன்னை மணக்க இன்னொருத்தி
உன் கையில் மஞ்சள் கயிறு 
என் கையில் தூக்கு கயிறு 
என் உயிரற்ற உடலை அழிக்க....

சென்னை தினம்


சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.நிஜம் நிழல்


நிஜம் என நினைத்து
நிழலை நேசித்துவிட்டேன்;
நேரம் செல்ல செல்ல,
நிழல் மறைந்து போனது...
நிலையான நினைவுகளை
வலிகளாக விதைத்து விட்டு ..

காத்திருப்பின் வலியும் காலத்தின் மகிமையும்

கால் கடுக்க காத்திருக்கும்
போது தான் தெரிகிறது
காத்திருப்பின் வலியும்
காலத்தின் மகிமையும் ...

நம் குடைகள்!!!வண்ண வண்ண வர்ணங்களில்
வாசமில்லா பூக்கள்!!!!
மழைக்காக திடீரென
மலர்ந்த மலர்கள்!!!
நினையாமல் நம்மை காக்கும்
நம் குடைகள்!!!

உறவு நிலைக்கும் உயிர் பிரிந்தாலும்


உண்மை அன்பில்
உள்ளங்கள் இரண்டு
உரிமை உடன்
உணர்வுப் பூர்வமாக
உன்னத காதலில்
உறவாக இணைய
உலகம் உள்ள வரை
உயிர்கள் வாழும் வரை
உறவு நிலைக்கும்
உயிர் பிரிந்தாலும்.

காதல் காணிக்கை


நிம்மதியான நித்திரையை
தொலைத்தேன் உன்னால்

இனிமையான இதயத்தை
தொலைத்தேன் உன்னிடம்

அழகான அன்பை அள்ளி
அள்ளி தந்தேன் உனக்கு

காலம் போற்றும் காதலை
காணிக்கையாக தந்தேன்

கட்டுக்குள் அடங்கா
காட்டாறு வெள்ளமென

வேகமாக அடித்து
சென்றாய் !!!
அனைத்தையும் நீ....

உதிர சொந்தமில்லா உயிர் பந்தம்!!


உதிர சொந்தமில்லா
உயிர் பந்தம்!!
உயிருக்கு மேலான
உறவிது..
உறவிற்கு மேலான
உணர்விது;
உண்மையான அன்பின்
உறைவிடம்!!!
உலகமே போற்றும்
உன்னதம்..
உயிருக்கு மேலான
நட்பிது....

கரம் பிடிக்க


கனவில் கண்ட உன்னை
கண்டு பிடித்து ,
கரம் பிடிக்க நினைத்து
காத்திருந்தேன்...

எனக்காக நீ பிறந்து
என்னை அறிந்து,
என்னிடம் சேர்ந்தாய்
என் எண்ணப்படி...

நாம் கரம் பற்றி என் கனவு
நனைவாக,
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க வாழ்வோம் மகிழ்வுடனே...

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் உயிர்


உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்றாய்,
ஆம் நீ சொன்னதை செய்தும் விட்டாய்;
என் உயிரையும் உன் உடன் நீ எடுத்து
சென்றுவிட்டாய் நீ உரைத்த படியே....

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அவர்கள்
புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறார்
ஒவ்வொரு மனங்களிலும்.....

மனித தன்மையை இழப்பது ???


மிருகம் மனிதனாக மாறியது
பரிணாம வளர்ச்சி .....
மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக
மனித தன்மையை இழப்பது ???

உயிர்


பட்டும் படமால் பழகி


பட்டும் படமால் பழகி
பாதியில் போனாலே
பரிதவிக்கும் மனதில்,

பாசமோடு பழகி
பண்பாக பழகி
பனிவோடு பழகி

பறந்து போனாய்
பிரிந்து போனாய்
பாதியில் போனாய்

பாலைவன மலராக
பட்டு போனேன்
பாதியிலேயே

பகல் கனவும்
பளிக்காமல்
பரிதவிக்கின்றேன்..

ஒருதலை காதல்


உன் காதலின் வலி உன்னை தாக்கி
என்னையும் வலி கொள்ள செய்கிறது

என்னவனாக உன்னை நினைப்பதினால்
உன் காதலின் வலியும் என் வலியாக......

உன் ஒருதலை காதலுக்காக உன் தவிப்பு,
என் காதலனின் காதலுக்காக என் துடிப்பு!!

காதல் நிறைவேற காத்திருக்கிறேன் நான்
என் காதலனின் ஒருதலை காதல் நிறைவேற

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் ...


விலகாத உறவிது
விரும்பும் உறவிது
வலிகளை உடைக்கும்
வாசமிகு மலர் இது
உயிரானது 
உறவானது 
உணர்வானது
உண்ணதமானது
அன்பான மலரிது
அன்னைக்கு ஈடானது 
அகிலத்தையே ஆளும்
அழகான நட்பிது......
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் ...

காதல்


நான் விண் நோக்கி வான் நோக்கி 
போகையிலே,
என் காதல் என்னோடும் மண்ணோடும்
புதைந்து போகும் !!
என் மனதோடு மட்டும் புதைத்து 
வைத்திருப்பதால் ....

பதில்எப்போதும் பதில் வரும்
எந்நேரமும் பதில் வரும்

சின்னஞ் சிறிதாக வரும்
சிரிப்பை கொண்டு வரும்

அழகான விடை வரும்
அற்புதமாகவே வரும்

அக்கறை உடன் வரும்
அதிக அன்புடனே வரும்

இன்பத்தை தர வரும்
இன்னலை தீர்க்க வரும்

இதயத்திலிருந்து வரும்
இன்முகத்தோடு வரும்

நண்பனிடம் இருந்து வரும்
நட்பாக உயிராக ஓடி வரும்

பிரிந்தேன் உன்னை உனக்காகதென்றலும் தீயாக சுடுகிறது
தேகமும் தீயாக எரிகிறது

வரவை எதிர் நோக்கிய என்
விழிகளில் வழிகிறது கண்ணீர்

கைபிடி அளவு அழகு இதயம்
கனமாக கனக்கிறது உன்னால்!!

கல்லாக மனம் மாற விழைகிறது
கண்கள் கலங்காமல் இருக்க....

வேதனையை வீசி சென்றாய்
வலிகளை கொடுத்து விட்டாய்

வேதனையும் சோதனையும்
விம்மலும் விசும்பலும் வலிகளாக

நொடிகள் தோறும் நினைக்கிறேன்
நிமிடங்கள் தோறும் தவிக்கிறேன்

விருப்பம் இல்லாத அழையா
விருந்தாளியாக நான்?????

அறிந்தேன் வியந்தேன்
உடன் பிரிந்தேன் உன்னை
உனக்காக......

மழை


ஆசை ஆசை


மலையென ஆசை
மனதிற்குள் ஆசை

மாமன் மீது ஆசை
மணக்க கூட ஆசை

மஞ்சள் கயிறு ஆசை
மாலை சூட்ட ஆசை

மாலை சூட ஆசை
மாமன் சூட்ட ஆசை

மகத்தான ஆசை
மகிழத்தான் ஆசை

மடி சேர ஆசை
மடி சாய ஆசை

மல்லி சூட ஆசை
மாமன் சூட்ட ஆசை

மறைக்க இயலா ஆசை
மறைக்கின்ற ஆசை

மாறாத ஆசை
மடியாத ஆசை

மனம் ஏங்கும் ஆசை
ஆசை ஆசை ஆசை....

தனிமை இனிமை


இனிமை இனிமை!!!
தேடிய தனிமை ,
என்றும் இனிமை!!!
கொடுமை கொடுமை!!
வேண்டாத தனிமை ,
என்றுமே கொடுமை....

தேடி


கிடைத்த அன்பை தொலைத்துவிட்டேன்
தொலைத் இடத்தை மறந்துவிட்டேன்

தொலை தூரம் தேடிவிட்டேன்
தொலைந்து போனேன் நான்

நீ தொலைவாகி போனதால்
அன்பும் தொலைந்து போனதால்

தொலைந்து போனேன் நான்
உண்மையை தேடி போவேன் நான்

அன்பை தேடி போவேன் நான்
உன்னை தேடி பிடிப்பேன் நான்....

காதல் தியாகம்


காதலுக்காக எதையும்
தியாகம் செய்யலாம்
பல நேரங்களில்
காதலையும்!!!
சில நேரங்களில்
காதலனையும்!!
தியாகம் செய்யலாம்
காதலுக்காக!!
காதலனுக்காக...

நீயே என் தாய்....


உடலை தந்தாய்
உயிரை தந்தாய்

உறவை தந்தாய்
உணவை தந்தாய

அன்பை தந்தாய்
அழகை தந்தாய்

அறிவை தந்தாய்
அடக்கம் தந்தாய்

பண்பை தந்தாய்
படிப்பை தந்தாய்

விவேகம் தந்தாய்
வீரம் தந்தாய்

கனவை தந்தாய்
கருத்தாய் தந்தாய்

அமிழ்தாய் இனித்தாய்
மனதில் நிறைந்தாய்

எனக்காக பிறந்தாய்
என்னை பெற்றாய்

உயிராய் இருந்தாய்
நீயே என் தாய்....

வாழ்க்கையின் சுவாரஸ்யம்


நாம்
நினைக்காதது
நடத்தலும்,
நினைப்பது
நடக்காமல்
நிலைகுலைவதுமே
நம் வாழ்க்கையின்
சுவாரஸ்யம்....

எண்கள்


அழிக்கவும் முடியாமல்
அழைக்கவும் முடியாமல்
தொலைக்கவும் முடியாமல்
தொடரவும் முடியாமல்

என்றாவது ஒரு நாள்
தொடர்வோம் என்ற
தொடர் நம்பிக்கையில்
நம் தன்னபிக்கையில்

நம் கையில் இருக்கும்
கைபேசியில் இருக்கும்
எண்கள் பல ..

ஆடு கோழி


ஆத்தா ஆடு கேட்டாளா
இல்லை கோழி கேட்டாளா
ஏன் ஐயா இப்படி ஆடி வந்தா
ஆசை ஆசையா வளத்து
அழகாக ஓடிகிட்டு இருக்க
ஜீவன்களை புடிச்சு
தலைய வெட்டி சாய்கிரீங்க
காணமுடியல சாமி
இந்த கொடுமைய ....

ரயில் பயணம்


அழகிய ரயில் பயணம்
அன்னையின் தாலாட்டாய்
அற்புத இசையுடன்
அன்பை பொழிகிறது ...
.

நட்புநட்பு என்பது சில பேருக்கு
இலை மாதிரி
ஒன்னு போனா இன்னொன்னு

சில பேருக்கு பூ மாதிரி
ஒரு முறை பூத்து பிரிச்சிட்டா
அவ்வளவுதான் மறுபடியும்
எடுத்து ஒட்ட முடியாது !!

சிலர் மனிதர்கள்


பல பல மனிதர்களை நம் வாழ்க்கையில்
நாம் சந்தித்தாலும் ஒரு சிலர் மட்டுமே
நம் மனதோடு இருப்பார்கள் !!!!
நம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகும்...

பிரச்சினை தியானம்


பிரச்சினை ஒன்று தீர்க்கப்படும் வரை
மனம் வேறு எந்தவித சிந்தனைக்கும்
செல்வதில்லை!!!!
இதுவே உண்மையான தியானம் ....

இன்பம் துன்பம்


சுகங்களை பரித்து கொண்டு
சோகங்களை பரிசலித்தாய்
இன்பங்களை பரித்துவிட்டு
துன்பங்களை தந்துவிட்டாய்....

சுதந்திர இந்தியாசுதந்திர இந்தியா
சுதந்திர தேசம்
சுதந்திர மக்கள்
சுதந்திர வாழ்க்கை
சுதந்திர மூச்சு
எத்தனை மகிழ்ச்சி ...

நாமாக பரிகொடுத்த சுதந்திரத்தை
போராடி தான் திரும்ப பெற்றோம்!!!!

இழந்த சுதந்திரத்தை பெற
எத்தனை எத்தனை போராட்டங்கள்
எத்தனை எத்தனை வலிகள்
எத்தனை எத்தனை வேதனைகள்
எத்தனை எத்தனை உயிர் தியாகங்கள்.....

நினைவு கூற்வோம் அத்தனை
உயிர்களையும் நன்றியுடன் ..

போராடி பெற்ற சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்த மாட்டோம்
என உறுதி எடுப்போம் ....

காதல்

காதல் என்ற ஒன்று மட்டுமே 
உலகில் உள்ள அத்தனை 
உணர்ச்சிகளையும்
அள்ளி அள்ளித்தரும்...

உறவு


உறவாக உடன் இருந்த இலைகள்
பிரிந்து விட்டன என்னை !!!!
தூரத்து தொடர்பில்லா மேகம் உறவாக
அலங்கரிக்கின்றது கானல்நீராக.....

வாழ்க்கை

வேண்டியவர்கள்
வேண்டாதது போல்
வேதனை தந்து
வேடிக்கை காட்ட
வேண்டா
வெறுப்பாகிறது
வாழ்க்கை ....

நேசம்


நாம் முக்கியமாக நினைப்பவர்களை
நேசிப்பதை விட
நம்மை முக்கியமாக நினைப்பவர்களை
நேசிப்பது நல்லது...

வேதனை


காரணம் இல்லாமல்
தினம் தினம் சிலர் பலரை
தூக்கி எரிய தான் செய்கிறார்கள்
வீசி செல்லும் வலிகளும்
வேதனைகளும் உணராமல்...

சீமந்தம்திருமாங்கல்யம்
கழுத்தில் ஏறி
ஆணும் பெண்ணும்
அன்பால் இணைந்த
அன்பின் பரிசான
குடும்ப வாரிசாக
பிறக்கப்போகும்
மழலையை மகிழ்விக்க

மழலையை முதல் முதலாக
பெற்றெடுக்கும் தாயவளுக்குத்
தைரியமும் மகிழ்ச்சியும்
அள்ளித் தந்து துணிவூட்டி
அம்மி மிதித்து அருந்ததி பார்த்த
மகிழ்ச்சியை நினைவூட்டி

அழகான பச்சைப் பட்டு உடுத்தி
அழகு ஜடை பின்னல் வைத்து
கை நிறைய குலுங்கும்
வளையல் அணிவித்து
அழகாக நலங்கு வைத்து

பழங்களும் பலகாரங்களும்
வரிசையாக வைத்து
முதுநீர் குத்தி அட்சதைத் தூவி
பெரியவர்கள் ஆசிர்வதிக்க
கருவில் இருக்கும் குழந்தை
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
உலகைக் காண ஓடி வரும் ...

வசந்த காலம்என் உயிராக இருந்த
உன்னை நினைத்தவுடன்
கவிதை வந்தகாலம்
வசந்த காலம்!!!

என் உயிரையே
பிரித்து சென்றுவிட்ட
உன்னை நினைத்தவுடன்
கண்ணீர் வருகிறது
நிகழ்காலத்தில் ....

பாசம் வேஷம்


பாசம் எது
வேஷம் எது
என்று உணராமல்
நாம் காட்டும் பாசமே
நம்மை சுட்டெரிக்கிறது
ஒரு தருணத்தில் ....