சனி, 2 ஏப்ரல், 2016

பணம்‬


இல்லாதவனும் தேடுவான்
இருப்பவனும் கூட தேடுவான்!!
எவ்வளவு தான் இருந்தாலும்
என்னை வேண்டாமெனும்
மனிதன் பிறக்கவே இல்லை....

வெற்றி தோல்வி


வெற்றியும் தோல்வியும்
யாருக்கும்
நிரந்தரம் அல்ல ...
வெற்றியில் ஆடாதே...
தோல்வியில் துவளாதே...

துரோகி


எதிர்த்து நின்று நம்மைத் தாக்கும்
எதிரியையும் மன்னிக்கலாம்...
எதிர்பாராத போது கூடவே இருந்து
எட்டி உதைக்கும் துரோகியை
எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது !!!

நல்லது.


நமக்கு வேலை இல்லாத இடத்தில்
நாம் இருப்பதை விட
நகர்ந்து செல்வதே நல்லது!!
நமக்கும்....பிறருக்கும்...

புகை


புகை நமக்குப் பகை....
உடலுக்குப் பகை..
உயிருக்குப் பகை...
உறவிற்குப் பகை...
புகை உலகிற்கே பகை ...
சிந்திப்பீர்..

விழிப்புணர்வு

அரசியல் பதிவு அல்ல ...
விழிப்புணர்வு பதிவு .....

வெட்கங்கள்

என் கால்விரல் கோலத்தில் ஒளிந்திருக்கிறது
என்னவனுக்கான என் வெட்கங்கள்!!

நட்பு காதல்


நட்பு என்ற தொப்புல் கொடி கிடைக்காதவர்களே
காதல் என்ற நஞ்சுக்கொடியில் சிக்கிக் கொள்கிறார்கள்