சனி, 11 ஜூன், 2016

இதய துடிப்பு


இரண்டு இதயங்களின்
துடிப்பு மெட்டி ஒலியாக ...

காதல்


இரு உயிர்கள் ஓர் உயிராக 
சங்கமிக்கும் அழகிய காதல் ...

காதல் போதை


காதல் என்ற கனவில் மிதக்கும் வரை
போதை என்ற மயக்கம் தெளிவதில்லை...

வலி


நம் மனதிற்கு பிடித்தவர்கள்
நமக்கு தரும் சிறு வலியை விட
கொடுமையான வலி
இந்த உலகத்தில் ஏதும் இல்லை..

உண்மை பொய்


உண்மை கூட பொய்யாகும்
புரியாத பட்சத்தில்!!
பொய் கூட உண்மையாகும்
புரியும் பட்சத்தில்!!

Akka....


விளையாட்டு விஷமாக..


விளையாட்டாக செய்யும்
சின்ன சின்ன
விசயங்களும்
விஷமாக மாறலாம் ..

மதுவிலக்கு


எல்லா கட்சியும் மதுவிலக்கு மதுவிலக்கு என்று ஓட்டு வாங்க கத்திகிட்டே தான் இருக்காங்க ...
நடக்குமா என்று தான் தெரியல ...
எல்லாருக்கும் வேண்டாம் என்றால் அப்ப யார் தான் கோடி கணக்கில் வாங்கி குடிக்கின்றார்கள்...
மாபெரும் கட்சி கூட்டம் நடக்க இருந்த இடத்தில் ஒன்றை மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு சாலைகளுக்கும் நடுவே மரங்களுக்கு கீழே ஒரு குடிமகன் சாய்ந்து இல்லை இல்லை தன்னிலை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
எந்த கட்சியில் தலைவன் முதல் கடைசி தொண்டன் வரை மதுவை தொடமாட்டோம் என உறுதி மொழி கொடுத்து அதை செயல்படுத்துகிறதோ அந்தக் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும் ...
அப்படி ஒரு கட்சி இங்கே இல்லை ...
அப்படி ஒரு கட்சி இனி வரப்போவதும் இல்லை ...

பகல் கொள்ளை


பகல் கொள்ளை அடிப்பது தெரிந்தே
கேள்வி கேட்காமல் கேட்கும் காசையும்
தந்துவிட்டு திரும்புவோம்
நம் பிள்ளைகளின் நாளைய
எதிர்காலத்திற்கு நல்லது செய்த
திருப்தியில் !!!

பிள்ளைகள்


நமக்கு கிடைக்காததை நம் பிள்ளைகளுக்கு
திணிக்க வேண்டுமென நினைக்கிறோமே தவிர,
அவர்கள் விரும்புவதை அவர்களுக்கு தர
நாம் முன்வருவதே இல்லை....

Miss you..


உடன் இருப்பவர்களை விட,
விட்டு விலகி சென்றவர்களிடமே
அன்பும் பாசமும் அதிகரிக்கும் !!

நினைவு


அழகிய பகலும் அன்னியமாகி போனது
நீளமில்லா என் இரவுகள் நீளமாகி போனது
நித்தம் நித்தம் உன் நினைவு வந்து போவதால்!!

முகநூல்


முகநூல் என்ற நூலில்
முகம் காட்டாமலேயே
முகவரி தேடி அலைகிறோம்
முக மூடிகளுடன்!!!

சொன்னீங்களே செஞ்சிங்களா??


சொன்னீங்களே செஞ்சிங்களா??
அதுக்கு முன்பே நீங்கள் சொன்னீங்களே,
அதை நீங்கள் செஞ்சீங்களா??
இல்லை அடுத்து நாங்கள் வந்தால் செய்வோம்னு சொல்ராங்களே அவுங்க தான் செய்வாங்களா??

முதல்ல எது மக்களுக்கு முக்கியமாக
வேண்டுமோ அதை யோசிக்க ..
செய்ய முடியறத சொல்லுங்கள்..
சொன்னத செய்யுங்கள் ..

உனக்காக நான்


எனக்காக யாரும் இல்லை என்பதை விட்டு,
உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்லி
கொஞ்சம் அன்பை தந்து தான் பாருங்களேன்
உங்களுக்கு கிடைக்கும் அன்பை !!!

காதல்


காதல் புரியாத எனக்கு
காதலை கற்றுத்தந்து,
கவிதையும் கற்றுத்தந்து,
கனவையும் பரிசாக தந்து,
காற்றோடு மறைந்துவிட்டாய்
காதலை பறக்கவிட்டு!!

உலக பூமி தினம் ...

பூமியும் தாயும் ஒன்று என்பார்கள்..
ஆம் இருவரும் நாம் என்ன செய்தாலும் மன்னித்துவிடுகின்றார்களே!!
என்ன இருந்தாலும் பொறுமைக்கும் அளவு உண்டே...
பூமாதேவியை கோபத்தில் ஆழ்த்தும் செயல்களை குறைத்தால் தான் நமக்கு நமது சந்ததிகளுக்கும் நல்லது ...
ஏப்ரல் 22 உலக பூமி தினம் ...
1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது .

Fb நேம்


என்னமா இப்படி கொளுத்துதே வெயில் ..
இப்பவே இப்படி காய்யுதே ...
இன்னும் போக போக அவ்வளவு தான் போல ...

மார்க் வேற நேற்று என் அக்கவுன்டஅ டிஸ்ஏபில் பண்ணிடார்...வோட்டர் ஐடி போட்டோ அனுப்பினபிறகு இந்த நேம் வச்சுக்கோன்னு சொல்லிட்டார்.

சோ எல்லாரும் அவுங்க நேம் வச்சுக்கோங்க Fb ல.
இல்லாடி மார்க் உங்கள் அகவுன்டையும் டிஸ்ஏபில் பண்ணிடுவார்.

நினைவுகள்


நினைக்காத நேரமில்லை
நினைக்கவும் தவறவில்லை
நினைக்க நான் எண்ணியதே இல்லை
நீ நினைவிலிருந்து போகவில்லை
நீ நினைவில் இருந்து சாகவில்லை
உன் நினைவுகளே என் தொல்லை!!

இமை....இதயம்...

இமைக்க மறந்த
இமைகளை கொஞ்சம்
இமை....

இளைப்பாறட்டுமே நம்
இதயம்!!

ஓட்டு


ஓட்டு போடும் மக்களோ இவர்களால்
நமது ஊருக்கும் நாட்டுக்கும்
நல்லது நடக்கும் என்ற பொதுநலத்தில்
வரிசையில் நின்று வாக்களிக்கின்றார்கள்!!!
ஆனால் ,
தேர்தலில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும்,
தாங்கள் வென்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும்
நல்லது நடக்கும் என்ற சுயநலத்தில் தான் வேட்பாளர்களாகின்றார்கள்....

அன்பு... பண்பு..


அன்பானவர்கள் எல்லாம்
அழகானவர்களே!!
பண்பானவர்கள் எல்லாம்
பாசமிக்கவர்களே!!

புரிதல் ...அன்பு..


புரிதல் இல்லாமல்
பிரிந்து செல்லும்
உறவுகளில் அன்பு
இல்லாமல் இல்லை ..
புரிந்த பிறகு
விலகி இருப்பதில்
நியாயமில்லை...

அழகிய புரிதல்!!!!


நமக்கு மிகவும் பிடித்தவர்களை
அவர்களுக்கு பிடித்தவர்களிடம்
நாம் விட்டுக்கொடுத்து
விலகி செல்வது
பிரிதல் அல்ல...
அது அழகிய புரிதல்!!!!

சுற்றிக்கொண்டு ..


இப்படி இங்கேயே சுற்றிக்கொண்டு சுற்றி இருப்பவர்களை கொஞ்சம் கூட நிமிர்ந்து பார்க்காமல் இருந்தால், நாம் உடம்பு முடியாமல் கூப்பிட்டால் கூட ஏன் என்று கேட்க பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்

இது உண்மையா ???

பத்து மாதம் ஓர் உடலாய்
ஈர் உயிராக இருந்த
தாய் சேய்
வலி இல்லாமல்
பிரித்தெடுப்பதாலேயே
பாசமே இல்லாமல்
வளர்கின்றனர்..
வளர்ந்த பின் வலியே
இல்லாமல் பிரிகின்றனர்...


ஆண் பெண் நட்பு


ஆண் பெண் நட்பு மிகவும் அழகானது..
அமைவது மிக மிக கடினம்..
இறுதி வரை உயிராக இருப்பது வரம்...

அழகு அன்பு


அனைவரின் மனதைக் கவர
அழகாக இருக்கத் தேவையில்லை..
அன்பாக இருந்தாலே போதும்!!

100% வாக்கு பதிவு வராமல் போவதற்கான காரணங்கள்:

தங்கள் ஜனநாயக கடமையை செய்த அனைவருக்கும் நன்றிகள் ..
100% வாக்கு பதிவு வராமல் போவதற்கான காரணங்கள்:

1. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை சார்ந்தவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போடுவதில்லை அல்லது போட முடிவதில்லை .

2. வெளியூர், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதில்லை.

3. ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்கு உரிமை பெற்றிருப்பது.

4. இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன ?? இவை தீர்க்கப்பட்டால் நிச்சயமாக வரும் தேர்தலில் 100% வாக்குகள் பதிவாகும்.

Time pass...


ஏழை விவசாயி

பக்கத்து நிலங்கள் கட்டிடங்களாக மாறினாலும், தான் மட்டும் மாறாமல் கடின உழைப்புடன் உழைக்கும் ஏழை விவசாயி....
தலை வணங்குகிறோம் உங்களைப் போன்றவர்களுக்கு....

வாழ்த்துக்கள்


எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்
என நம்புவோம் ...
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
வெற்றியை தவிர விட்டவர்களுக்கு அனுதாபங்கள்....

ஆண்


தன் குடும்பத்திற்காக தன் வலிகள்
அனைத்தையும் தன்னுள் மறைத்து,
வெளியே சிரிக்கும் அனைத்து ஆண்களும்
கடவுளைவிட உயர்ந்தவர்களே..
..

இதய கைதி


பூட்டி வைத்த இதயத்தை திறப்பது எளிதல்ல..
ஒரு முறை திறந்து உள்ளே புகுந்துவிட்டால்,
ஆயுள் வரை அந்த இதயத்தின் கைதி நீ
...

தந்தை.. கணவர்.. மனிதர்...

இதோ
பாசமான தந்தை
அன்பான கணவர்
பொறுப்பான மனிதர்...
Hats off....great...

பிரச்சினை இல்லா நேரக் குறைப்பு அரசுக்கும் "குடி"மகன்களுக்கும்


காலை 12 மணி வரை கடை அவ்வளவாக ஓடாது.
ஆனால் இரவு 8 pm - 10 pm இந்த இரண்டு மணி நேரம் நல்லா ஓடும் ...
ஏன் இரவு 8 மணிக்கு கடைய மூடக்கூடாது??
அரசு அறிவித்த நேரக் குறைப்பு யாருக்கும் பிரச்சினை இல்லாத நேரக் குறைப்பு அரசுக்கும் "குடி"மகன்களுக்கும்...வேதனை

தன்னம்பிக்கை


இரண்டு கைகளை இழந்தாலும்
தன் தன்னம்பிக்கை இழக்கவில்லை...
Hats off ....

உணவை வீணாக்காதீர்கள்....


ஒரு வாய் சோற்றுக்கே
வழி இல்லாமல் பலர்..
அதை துச்சமாக மதித்து
வீணாக்கும் சிலர் ...
உணவை வீணாக்காதீர்கள்....

வருகை


அவன் வருகைக்காக
என்னை அலங்கரித்து,
வாயிலில் நிற்கும்
நொடிகள்......

அன்பு


கொடுக்க கொடுக்க
குறையாமல்
அதிகரிக்கும் ஒன்று
அன்பு மட்டுமே !!!!

தயவுசெய்து சிந்தியுங்கள்.....

தயவுசெய்து சிந்தியுங்கள்.....

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையே இவர் கை ...Hats off....

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ...அற்புதம் ...வாழ்த்துக்கள் ...

அன்பு

விட்டுச்செல்லும் உறவை
பெரிதாக நினைக்கிறோமே தவிர,
விலகிச்சென்றாலும்
தொடர்ந்து வரும் அன்பை
யாரும் மதிப்பதே இல்லை..

I love my mom


I love my mom..
But she loves more than me..

வண்டி ஓட்டிக்கொண்டே போன் பேசுபவரா நீங்கள்??..சிந்திக்கவும் ..


வண்டி ஓட்டிக்கொண்டே போன் பேசுபவரா நீங்கள்??
அதுவே நீங்கள் சுயநினைவோடு பேசும்
கடைசி வார்த்தையாக கூட இருக்கலாம் ....
சிந்திக்கவும் ....

அன்னதானம்

ஒரு வேளை பசிக்கு கூட உணவின்றி
தவிப்பவர்களுக்கு உணவு தருவதே
உண்மையான அன்னதானம்...