திங்கள், 25 ஜூலை, 2016

தவறுகள்

பிறரிடமிருந்து
நாம் மறைக்கும் அனைத்தும்,
தவறு என தெரிந்தே
நாம் செய்யும் தவறுகள்....

முத்தங்கள்

முத்தங்கள் இனிக்கின்றனவோ
ஆறாம் அறிவு அற்ற உயிர்களுக்கும்
உன் அன்பான இதழ்கள் தருவதினால் ...

ஓவியம்ஓவியன் வரைந்தது
ஓவியம் மட்டும் அல்ல
தனது உயிர் தந்து
உயிர்பித்த கற்பனை பெண்

பணம்


பணம் இருப்பவர்களுக்கு மனமிருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதர்களிடம்
பணம் இருப்ப்தில்லை....
இருந்தும் இருப்பதை
பகிர்ந்து வாழும்
உண்மையான தெய்வம்...

துணை

நம் கரம் பிடித்து
நடை பழக்கிய தந்தைக்கு
நாம் இரு கரம் கொடுத்து
துணையாக இருப்போம்
நம் மூச்சு உள்ள வரை ...

சண்டைகள்

சண்டைகள் சங்கடங்களை தரும்
நம்மை விட அதிகமாக
நம் சந்ததிகளுக்கு

ஒற்றை சொல்

நீ உதிர்த்த ஒற்றை சொல்லுக்கு எத்தனை வலிமை???
என்னை ஆனந்த கடலில் மூழ்கடிக்கும்
சில நேரங்களில் மட்டுமே என்னை
சோக கடலில் தத்தலிக்க வைக்கிறது

காதலுக்காக

எதை வேண்டுமானாலும்
தியாகம் செய்யலாம்
காதலுக்காக!!!
காதலை தவிர....

I LOVE U

இந்த ஒற்றை வார்த்தை தரும்....
அழகான வாழ்க்கை தரும்
அளவில்லாத மகிழ்ச்சி தரும்
அன்பு உண்மையாக இருந்தால் ....

உறவு

உறவு என்ற மூன்று எழுத்தில் இருப்பது
வெறும் சொந்தமும் பந்தமும் மட்டும் அல்ல
நம்பிக்கையும் பாசமும் கூட ...
இது உடைந்துவிட்டால்
உறவை ஒட்ட முடியாது கடவுளாலும்....

குறை


எப்போது ஒருவர் குறைகள் மட்டுமே
உன் கண்களுக்கு தெரிகிறதோ
அங்கே
உன் காதல் காணாமல் போய்விட்டது ...

அந்த நொடிஉன்னை கண்களால் கண்ட
அந்த ஒரு நொடியிலேயே
நான் கரைந்து போய்
உன்னுடன் கலந்து விட்டேன் !!

நேசம்

உலகில் உள்ள உயிர்கள்
எதையும் நீ நேசிக்க வேண்டாம்
உன்னை மதிக்கும்
மனதை காயப்படுத்திவிட்டு!!!

காதல்

கவலைகள் மட்டுமே காதலின் பரிசு
கண்ணீர் மட்டுமே காதலின் விலை
கவிதை மட்டுமே காதலின் துணை
கனவு மட்டுமே காதலின் மீதி....

நினைவுகள்நாம் நேசித்த உறவு
நம்மை விட்டு பிரிந்தாலும்
நினைவுகள் மட்டும்
நம்மை விட்டு பிரிவதில்லை...

உன் அன்பினில்!!!

மயக்கும் மாலை பொழுதைவிட
உன் அருகாமையில்
மயங்கிகிடக்கிறேன்
உன் அன்பினில்!!!

மலர்கள்மலர்கள்
மங்கையர்களுக்காக
மலர்தனவோ!!
மயில் தோகை விரித்த
மயிலின் அழகை தந்தனவோ !!
மாலையில் மலர்ந்த மலர்கள்
மயக்கும் மணம் வீசியே
மனதை கொள்ளை கொண்டனவோ!!

மௌனங்கள்

சில மௌனங்கள் நிம்மதி தரும்
ஆனால் ,
சில மௌனங்கள் வேதனையும் தரும் !!!

பசிக்கொடுமைஉலகிலேயே கொடுமை
சிரிப்பது போல நடிப்பது..
அதைவிட கொடுமை
பசிக்கும் வயிறை
ஏமாற்றுவது ....

அன்பு மொழி ....

உலகத்தில் உள்ள உயிர்கள்
உணரும் உன்னத மொழி
உயிர்கள் அனைத்தையும்
இணைக்கும் ஒரே மொழி..

உண்மையை உடலாகவும்
நேசத்தை உயிராகவும்
கொண்ட மொழி ...
அதுவே அன்பு மொழி ....

நல்லது செய்வோம்..

பிறந்தோம் வளர்ந்தோம்
இறப்போம் இது இயற்கை 
வாழ்வோம் பிறர் போற்ற
பிறர் நலம் பேண நாம்
இடையில் என்ன செய்தோம்
இனியேனும் நல்லது செய்வோம்..

காதல்


உயிர் உன்னோடு கலந்துவிட்டது
உலகமே நீ என மாறிவிட்டது!!
உனக்காக துடிக்கிறது என் இதயம்!
உன்னை தான் ரசிக்கிறது கண்கள் !

வான வேடிக்கை !!!


தரையில் இடி இடித்து
காற்றில் சீரிப்பாய்ந்து
வானில் பூ மழையாய்
தீ மழை பெய்து
ஒளியும் ஒலியுமாக
நம்மை மகிழ்விக்கிறது
வான வேடிக்கை !!!

பெண்ணின் மனது...


பல பல பட்டங்கள்
படித்து வாங்கியவனுக்கும்
பிடிபடாதது
பெண்ணின் மனது...

உறவு

நம்மை நாமாக அப்படியே ஏற்றுக்கொள்ளும்
உறவு கிடைத்தால் நாமும் அதிஸ்டசாலியே!!!

காதலர்

கவலைகள் நெஞ்சடைக்க
கனவுகள் கரைந்து போக
கைவிட்டு போனது காதல்
காதலர் தினத்திலே!!!

ஆசிரியர்கள்

நம்மை தூக்கி விட்டு 
தான் மட்டும் அதே இடத்தில் 
இருந்து சந்தோஷப்படும் 
தெய்வங்கள் 
ஆசிரியர்கள் தான்!!

யார்

நாம் யார் என்று நமக்கு தெரியும்!!
அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டி 
அவசியம் இல்லை ...

பணம் அன்பு

நிலையில்லாத பணத்தை நம்பி 
நிலையான அன்பையும் 
நிரந்தரமில்லாத வாழ்க்கையையும் 
நிர்மூலமாக்காதே!!!

தாய் மடி

தாய் மடி தேடும் மழலை
தாயாக நினைத்து
தலை சாய்கிறது!!!!
தரணியில் தாயாக பலர்
தவித்தாலும் இவன்
தவிப்பு தெரிவதில்லை!!!
தாய் மடி கிடைப்பதில்லை ...

அன்னை

பெண்கள் கணவன் வீட்டில் தானே
சமைத்து உண்ணும்போதும்,
ஆண்கள் தங்கள் மனைவியின்
கையால் உண்ணும் போதும் தான்
உணர்கின்றனர் தங்கள் அன்னையின்
அன்பையும் கை பக்குவத்தையும்.

வாழ்க்கை

யாருக்காகவும் வாழாதே
உனக்காக வாழ்!!
உன் வாழ்க்கையே
மிகவும் சிறியது...

காத்திருப்பு

கனவுகள் மெய்யல்ல!!
என் காதலும் பொய்யல்ல..
காட்சிகள் மெய்யல்ல!!
என் நேசமும் பொய்யல்ல..
உனக்காகவே காத்திருக்கும்,
என் காத்திருப்பும் பொய்யல்ல...

தேவதைகள்


தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லை...
ஆனால் வளர்க்கப்படுகிறார்கள்!!!
எல்லா இல்லங்களிலும் மகள்களாக!!!

காதல்


உனக்குள் நான் இருக்க
எனக்குள் நீ இருக்க
நமக்குள் காதல்
நம் குழந்தையாக ....

உறவுகள்

உணர்வுகள் உதிரத்தை விட உயர்ந்தது ..
உறவுகள் உணர்வுகளை விட உயர்ந்தது !!


ரத்த தானம்

சாதி,மத,இன,மொழி,ஏழை,பணக்காரர்கள் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது இரத்தம் மட்டுமே....
தானம் செய்தாலும் தானே மீண்டும் சுரந்துவிடும்...
அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும் ...
அதிலும் அரிய இரத்த வகை உள்ளவர்கள் நிச்சயமாக செய்ய வேண்டும் ...
உங்கள் ரத்த தானம் பல உயிர்களை காக்கும் ...


உனக்காக யாருமே இல்லை
என எண்ண வேண்டாம்
உனக்காக மட்டுமே துடிக்க
உன் இதயம் இருக்கிறது!!
உலகிற்கு உழைக்க
உன் உடல் இருக்கிறது!!

perfect


இங்கே யாருமே perfect கிடையாது...
கடவுளும் தான்!!
சில உயிர்களை படைக்கும் போது
சிறு சிறு பிழைகள் செய்துவிடுகிறார்
சில நேரங்களில்....

வெற்றி !!

பயிற்சியும் முயற்சியும் 
நிச்சயம் வெற்றி தரும்!!

முயன்றால் முடியாதது ஏதும் இல்லை..
Hats off.....
கோபம்


சின்ன சின்ன
விஷயங்களுக்கு கூட
உனக்கு கோபம் வந்தால்
பிரச்சினை உன்னிடத்தில் தான்....