பிறரிடமிருந்து
நாம் மறைக்கும் அனைத்தும்,
தவறு என தெரிந்தே
நாம் செய்யும் தவறுகள்....
முத்தங்கள் இனிக்கின்றனவோ
ஆறாம் அறிவு அற்ற உயிர்களுக்கும்
உன் அன்பான இதழ்கள் தருவதினால் ...
ஓவியன் வரைந்தது
ஓவியம் மட்டும் அல்ல
தனது உயிர் தந்து
உயிர்பித்த கற்பனை பெண்
பணம் இருப்பவர்களுக்கு மனமிருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதர்களிடம்
பணம் இருப்ப்தில்லை....
இருந்தும் இருப்பதை
பகிர்ந்து வாழும்
உண்மையான தெய்வம்...
நம் கரம் பிடித்து
நடை பழக்கிய தந்தைக்கு
நாம் இரு கரம் கொடுத்து
துணையாக இருப்போம்
நம் மூச்சு உள்ள வரை ...
சண்டைகள் சங்கடங்களை தரும்
நம்மை விட அதிகமாக
நம் சந்ததிகளுக்கு
நீ உதிர்த்த ஒற்றை சொல்லுக்கு எத்தனை வலிமை???
என்னை ஆனந்த கடலில் மூழ்கடிக்கும்
சில நேரங்களில் மட்டுமே என்னை
சோக கடலில் தத்தலிக்க வைக்கிறது
எதை வேண்டுமானாலும்
தியாகம் செய்யலாம்
காதலுக்காக!!!
காதலை தவிர....
இந்த ஒற்றை வார்த்தை தரும்....
அழகான வாழ்க்கை தரும்
அளவில்லாத மகிழ்ச்சி தரும்
அன்பு உண்மையாக இருந்தால் ....
உறவு என்ற மூன்று எழுத்தில் இருப்பது
வெறும் சொந்தமும் பந்தமும் மட்டும் அல்ல
நம்பிக்கையும் பாசமும் கூட ...
இது உடைந்துவிட்டால்
உறவை ஒட்ட முடியாது கடவுளாலும்....
எப்போது ஒருவர் குறைகள் மட்டுமே
உன் கண்களுக்கு தெரிகிறதோ
அங்கே
உன் காதல் காணாமல் போய்விட்டது ...
உன்னை கண்களால் கண்ட
அந்த ஒரு நொடியிலேயே
நான் கரைந்து போய்
உன்னுடன் கலந்து விட்டேன் !!
உலகில் உள்ள உயிர்கள்
எதையும் நீ நேசிக்க வேண்டாம்
உன்னை மதிக்கும்
மனதை காயப்படுத்திவிட்டு!!!
கவலைகள் மட்டுமே காதலின் பரிசு
கண்ணீர் மட்டுமே காதலின் விலை
கவிதை மட்டுமே காதலின் துணை
கனவு மட்டுமே காதலின் மீதி....
நாம் நேசித்த உறவு
நம்மை விட்டு பிரிந்தாலும்
நினைவுகள் மட்டும்
நம்மை விட்டு பிரிவதில்லை...
மயக்கும் மாலை பொழுதைவிட
உன் அருகாமையில்
மயங்கிகிடக்கிறேன்
உன் அன்பினில்!!!
மலர்கள்
மங்கையர்களுக்காக
மலர்தனவோ!!
மயில் தோகை விரித்த
மயிலின் அழகை தந்தனவோ !!
மாலையில் மலர்ந்த மலர்கள்
மயக்கும் மணம் வீசியே
மனதை கொள்ளை கொண்டனவோ!!
சில மௌனங்கள் நிம்மதி தரும்
ஆனால் ,
சில மௌனங்கள் வேதனையும் தரும் !!!
உலகிலேயே கொடுமை
சிரிப்பது போல நடிப்பது..
அதைவிட கொடுமை
பசிக்கும் வயிறை
ஏமாற்றுவது ....
உலகத்தில் உள்ள உயிர்கள்
உணரும் உன்னத மொழி
உயிர்கள் அனைத்தையும்
இணைக்கும் ஒரே மொழி..
உண்மையை உடலாகவும்
நேசத்தை உயிராகவும்
கொண்ட மொழி ...
அதுவே அன்பு மொழி ....