சனி, 9 மே, 2015

என் இதயத்தில் பச்சை



உன் நிழற்படத்தை
அழித்து விட்டேன்....
ஆனால் என் மனதில்
இருக்கும் உன்
நிஜ பிம்பத்தை
அழிக்க
முடியவில்லை!!!
என் இதயத்தில்
பச்சை குத்தி
இருப்பதால் ...


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

வியாழன், 7 மே, 2015

அழகு



பெண்களின் அழகை
மட்டுமே ரசிக்கும்
ஆண்களுக்கு மத்தியில்
அன்பை மட்டும்
எதிர்பார்க்கும் ஆணை
தேடி தேடி களைத்து தான்
போகிறாள்
ஒவ்வொரு பெண்ணும் !!!!!

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

செவ்வாய், 5 மே, 2015

காதல்



கனவென்று நான் நினைக்க
காதலென்று நீ உரைக்க
காதலை நான் உணர்ந்து
காதலில் மெய் மறக்க
நிழலாகி மறைந்து போனாய்
என்னையும் என் காதலையும்
தனியாக தவிக்கவிட்டு....


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

ஞாயிறு, 3 மே, 2015

மழை


சுட்டெரிக்கும் சூரியனே
கொஞ்சம் கருணை காட்டு
சில்லென்ற மழைத்துளியே
கொஞ்சம் கருணை காட்டு!!

கொடிய வெப்பம் தவிர்க்க
பூமி அன்னை மடி குளிர
செடி கொடிகள் தழைக்க
பலன் பல தரும் மரங்கள் சிரிக்க

உயிர்களின் தாகம் தீர்க்கும்
ஏரி குளம் ஆறுகள் நிரைய
வறட்சி போக்கி வளம் கொடுக்க
விவசாயிகளின் துயர் போக்க

ஆங்காங்கே மிதமானது
முதல் பலத்த மழை பெய்து
மக்கள் முதல் மாக்கள் வரை
உலகின் அனைத்து உயிர்களின்

மனங்கள் குளிர்ந்து உன்னை
வாழ்த்த ஓடோடி வந்துவிடு
விண்ணை விட்டு மண்ணுக்கு
என் செல்ல மழையே!!!

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

சனி, 2 மே, 2015

நட்பு காதல்


நட்பு காதல்
இரண்டுக்கும் நடுவில்
ஒரு மெல்லிய கோடு!!!

நண்பர்கள் பலருக்கு
அன்பை கொட்டி
கொட்டி கொடுப்பது
நட்பு ....

ஒருவர் மீது மட்டுமே
அன்பை கொட்டி
கொட்டி கொடுத்தாலும்
திரும்ப திரும்ப
எதிர்பார்ப்பது காதல்...

என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

உண்மை இல்லை


நட்பிலும் உண்மை இல்லை
காதலிலும் உண்மை இல்லை
உறவிலும் உண்மை இல்லை
உணர்விலும் உண்மை இல்லை
பாசத்திலும் உண்மை இல்லை
வேஷத்திலும் உண்மை இல்லை
அன்பிலும் உண்மை இல்லை
வெறுப்பிலும் உண்மை இல்லை
கோவத்திலும் உண்மை இல்லை
குணத்திலும் உண்மை இல்லை
உன்னிடம் உண்மை இல்லை
என்னிடம் உண்மை இல்லை
உலகிலும் உண்மை இல்லை
இல்லவே இல்லை ....

வியாழன், 30 ஏப்ரல், 2015

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்


உழைப்பாளர்கள் இல்லை
என்றால் உலகமே இல்லை
உலகின் ஒவ்வொரு துரும்பும்
உங்களால் மட்டுமே
அசைக்கப்படுகின்றது
ஏன் உருவாக்கப்படுகின்றது...

உங்களின் வியர்வை சிந்த
உடலை ஓடாக தேய்த்து
ஓய்வின்றி உழைத்து
உலகை முன்னேற்றும்

நீங்கள் இல்லை என்றால்
இந்த உலகமும் இல்லை
வாழ்க்கையும் இல்லை
இந்த நன்னாளாம் 

உங்கள் பொன்னாளில்

உழைத்து உழைத்து ஓடாக
தேய்ந்த ஒவ்வொரு வீட்டின்
முதுகெலும்பான தந்தைகளுக்கும்
எல்லா நொடியும் எறும்பு போல்
உழைத்துக் கொண்டிருக்கும்
அன்பு தாய்மார்களுக்கும்

குடும்பத்தை தன் தோலில்
சுமக்கும் அண்ணாக்களுக்கும்
அண்ணன் இல்லாத வீட்டில்
அண்ணாவாக உழைக்கும்
அன்பான அக்காக்களுக்கும்

செல்ல குட்டி சின்ன தம்பி
செல்ல தங்கைகளுக்கும்
உலக நண்பர்கள் அனைவருக்கும்
என் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

உறவுகளை வரிசை படுத்தலாம்
ஆனால் உழைப்பாளர்களை
வரிசை படுத்த முடியாது ...

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி.....