திங்கள், 6 ஜூலை, 2015

வான் மழை முத்தம்

மொத்தமாக கிடைத்த முத்தத்தில் 
முழுவதுமாக நான் நினைந்து
மகிழ்ச்சியில் திளைத்து
திக்குமுக்காடிப் போனேன்
திடீரென பெய்த வான் மழையால் ...


நேசிக்கும் இதயம்....

துணையாக நீ இருக்க
வழியாக உன்னை நினைத்து
விழியாக உன்னை ஏற்க
வலிகளை மட்டும்
கொடுத்துவிடாதே
உன்னை மட்டுமே
நேசிக்கும்
என் இதயத்திற்கு....


இனிய இரவு வணக்கம் ....

நீ சொன்னாலும் சரி
நீ சொல்லவில்லை
என்றாலும் சரி
ஆனால் நான்
சொல்லிவிடுகிறேன்
உனக்கு ......
.......................
........................
........................
இனிய இரவு வணக்கம் ....


இனிய காலை வணக்கம் ....


உன் விழிகள்
விழிக்காமல்
துயில்வதனால்
பகலவனும்
யோசிக்கிறான்
பூமிக்கு ஒளி வீச.....

இனிய காலை வணக்கம் ....

நட்பு



உயிர் நட்பு வேண்டும்
என் உறவாக வேண்டும்
என்னோடு பேச .....
எனக்காக பேச......

தோள் சாய வேண்டும்
மனம் அழும் வேளை
விளையாட வேண்டும்
சிறு குழந்தை போல

தடம் மாறும் தருணம்
வழி மாற்ற வேண்டும்
மொத்தமாக என்னை
அவன் அறிய வேண்டும்

இறுதி வரை வேண்டும்
இரு துளி கண்ணீருடன்
என் இறுதி ஊர்வலத்தில்
அவன் இருக்க வேண்டும்

வேண்டாத ஆசை
வீணான ஆசை
விளங்காமல் இல்லை
புரியாமல் இல்லை

மறு பிறவி எடுத்து
ஆணாக பிறப்பேன்
உயிர் நட்பு கிடைக்க
என் உறவாக கிடைக்க.....

காதல் ஆசை



ஆசை ஆசை ஆசை

காதல் கொள்ள ஆசை
காதலிக்க ஆசை

காதல் சொல்ல ஆசை
காதில் சொல்ல ஆசை

காதலியாக ஆசை
காற்றில் பறக்க ஆசை

காத்திருக்க ஆசை
காக்க வைக்க ஆசை

நிறைவேறா ஆசை
நிறைவேறுமா என் ஆசை.....

எதிர் பார்த்தல்

எதிர் பார்த்து ஏமாறுவது கொடுமை
எதிர் பார்க்காமல் அனுபவிப்பது இனிமை...