இரு அன்பு உள்ளங்கள்
இணையும் திருமணம்
அதற்காக காத்திருக்கு
அதை நோக்கி என் மனம்
என் மணவாளனின் வரவை
எதிர் நோக்கி என் விழிகள்
வழி மேல் விழி வைத்து
வீற்றிருந்து காத்திருந்து
கலைவது நாட்களும்
காலமும் மட்டுமல்ல
என் கனவுடன் கூடிய
என் ஆசையும்
என் இளமையுடன் கூடிய
என் காதலும் ..
நமக்கு பிடித்தவர்களிடம்
ஆயிரம் வார்த்தைகள் பேசுவதை விட
நம்மை பிடித்தவர்களிடம்
ஒரு வார்த்தை பேசுவதே சிறந்தது...
பொன்நகை தேவையில்லை எனக்கு
உன் புன்னகை ஒன்றே போதும்
நம் அன்பு பரிசாக.....
மரிக்கின்ற எண்ணம் எனக்கில்லை இன்று
மரிக்கின்ற தருணம் வரும் வேலை உண்டு
நான் மடி சாய வேண்டும் உன் மடி மீது அன்று
என் துடிக்கின்ற இதயம் உன் மடி மீது போக
உயிர் பிரியும் முன்னே உன் முகம் காண வேண்டும்
விழி மூடும் முன்னே உன் விழி காண வேண்டும்
கேட்கின்ற குரல்கள் உனதாக வேண்டும்
மொழிகின்ற வார்த்தை உன் பெயராக வேண்டும்
விடுகின்ற மூச்சும் உன் நினைவாக வேண்டும்
தோல்வியை கண்டு துவளாதே
தோற்றவுடன் மனம் வெதும்பாதே
வெற்றியை கண்டு வியக்காதே
உடனே வேடம் பூனாதே
தோல்வியே வெற்றியின் முதல் அடி
வெற்றியே வாழ்க்கையின் முதல் படி
அடி மேல் அடி வைப்பதே வாழ்க்கை
படி படியாக முன்னேறு வாழ்க்கையில்
வெற்றியும் உனதே
தோல்வியும் உனதே
இரண்டும் ஒன்றே
என்பதை நீ மறவாதே ....
இன்று என் உறக்கத்திற்க்கும் கூட
நான் விரோதியாகி விட்டானோ???
என் கண்களும் மனதும் என்னை உறங்கவிடாமல்
என்னுடன் பேசிக் கொண்டே இருக்கின்றன....
பெறுவதில் இல்லை இன்பம்
தருவதில் தான் எத்தனை எத்தனை இன்பம்
கொஞ்சம் தந்து தான் பாருங்களேன்
அன்பையும் மகிழ்ச்சியையும் பிறருக்கு .....