சனி, 5 செப்டம்பர், 2015

இதயம்



படித்து படித்து கூறினாலும்
என் இதயம்
பார்க்க துடிப்பது உன்னையே!!

பார்க்க துடிக்கும் இதயத்தை
பார்க்கவிடாமல் தடுக்கும்
உன் விழிகள்!!!

பாசத்தை அள்ளி கொடுக்க
புரியாமல் சிரித்தாய்
மழலையாக!!

பாரா முகமாக நீ இருக்க என்
பாசம் மட்டும் குறையவே
இல்லை!!

பாவப்பட்ட இதயமாக
பரிதவிக்கிறது என் மனது!!

பனித்துளியாக நீ பிரிந்தாலும்
பாசத்தோடு உன் உடன்
இருப்பேன்...

பாலைவன சோலையிலே
பூத்து உதிர்ந்த சிறு மலராக!!!

உன் அன்பினிலே!


உன் மீது ஆயிரம்
கோபம் இருந்தாலும்
உன் அன்பான
குரல் கேட்டவுடன்
கரைந்து போகிறேன்
அதன் இனிமையிலே!!!!
என்னை மறந்து போகிறேன்
உன் அன்பினிலே!!!!

உயிரும் உடலுமே


பாசமும் நேசமும் அளவாக
இருந்தால் தோஷமில்லை!!!
நட்போ காதலோ
உயிராக உறவாக!!
உள்ளே புகுந்துவிட்டு,
உயிருடன் கலந்துவிட்டால்
பிரிக்க நினைத்தாலும்
அழிக்க நினைத்தாலும்
அழிவது உயிரும் உடலுமே....

நித்திரை


நிலையான நித்திரை எங்கே!!!!
நித்திரையை பரித்தவன் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே!
நினைக்க கூட இயலவில்லை
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை!!
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறேன்
நின் வரவிற்காக காத்துகிடக்கிறேன்
நிம்மதி இல்லா நிமிடங்களை
நின் நினைவுகளுடன் உயிர்பிக்கிறேன்...

Happy birthday darling...


Happy birthday darling...

இனிக்க இனிக்க
சுவைக்க சுவைக்க
மணக்க மணக்க
உங்கள் வாழ்க்கை
அமைய வாழ்த்துக்கள்

இவை யாவும்
உங்களுக்கு கிடைக்க
இறைவனை வேண்டுகிறேன் ...


மகிழ்ச்சி பொங்க
உங்கள் துணையாக
உடன் இருப்பேன்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

ரக்ஷா பந்தன்


ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை.

பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண் அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

அன்பு மழையில் நனைகிறேன்

மழையில்லாமல் நனைகிறேன்
சுடும் வெயிலை ரசிக்கிறேன்
இறக்கை இன்றி பறக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் சேர துடிக்கிறேன்
ஏங்கி ஏங்கி இளைக்கிறேன்
உன் உறவாக விழைகிறேன்
என் உயிராக நினைக்கிறேன்
அன்பு மழையில் நனைகிறேன்