திங்கள், 14 மார்ச், 2016

எதுவும் நம்மிடம் இல்லை...


எல்லாம் நம்மிடம் இருப்பது போல்
இருந்தாலும்
எதுவும் நம்மிடம் இல்லை !!!

காதல்


சுகங்களை தருவது மட்டும்
காதல் அல்ல!!!
சில சோகங்களையும்
தருவதும் காதலே!!!

நம்பிக்கை


நாம் பழகும் அனைவரும்
நம்முடன் பழகும் அனைவரும்
நல்லவர்களாக தான் இருப்பார்கள்
என்ற நம்பிக்கையில் தான்
முகநூல் இயங்குகிறது ....

உறவு


உறவு என்ற மூன்று எழுத்தில்
இருப்பது சொந்தமும்
பந்தமும் மட்டும் அல்ல..
நம்பிக்கையும் பாசமும் கூட ...
இது உடைந்தால்
உறவை ஒட்ட முடியாது
கடவுளாலும்....

அண்ணா தங்கை..


அன்னையை தொலைத்த தங்கைகளுக்கு
அன்னையாக இருப்பது அண்ணாக்களே..

காதல்...


சிலருக்கு காதலை
சொல்ல
தைரியம் இல்லை..
பலருக்கு காதலை
ஏற்க
மனமில்லை...

காதலி ..மனைவி ...


காதலி எதை பேசினாலும்
இன்முகத்தோடு
ஏற்றுக்கொள்ளும்
காதலன்,
கணவனானதும்
மனைவி சரியாகவே
பேசினாலும்
ஏற்றுக்கொள்வதில்லை!!