சனி, 23 மே, 2015

சில நொடிகள்


சில சந்தோஷங்கள்
சில நொடிகள் கூட
நிலைப்பதில்லை
நம் வாழ்க்கையில்
பல நூறு மடங்கு
வலிககளை வாரி
கொடுத்துவிட்டு
சென்றுவிடும்...

என் இதயம்



எனக்காக துடிக்க பல
இதயங்கள் இருந்தும்
கூட உன் ஒரே ஒரு
இதயத்தின் துடிப்பிற்காக
ஏங்குகின்றது
என் இதயம்
அங்கே நீ மட்டுமே
வாசம் செய்து
கொண்டிருப்பதால்....

மௌன மொழி

பேசிய வார்த்தைகளை விட
பேசாத மௌன மொழிக்கே
வலிமையும் வலிகளும் அதிகம் ...

சென்னை டிராஃபிக்


சிக்கி சிக்கி சீரழிகின்றது
என்றென்றும் எழில் மிகு
சிங்காரச் சென்னை
இடியாப்ப சிக்கல்
டிராஃபிக்கில்
புகையும் புழுதியுமாக...

புதன், 20 மே, 2015

வர்ணங்களை பூசிக்கொண்டு நடிக்காதே


நீ 
நீயாக 
இரு....
மனிதா....
உறவுகாக
நட்புக்காக 
அன்பிற்காக
காதலுக்காக 
பணத்திற்காக
வாழ்க்கைக்காக
என எதற்காகவும் 
பலப்பல போலியான
வர்ணங்களை
பூசிக்கொண்டு 
நடிக்காதே
மனிதா......

மே 18


தமிழன் நான் தமிழன்
என்று மார்தட்டிக்
கொண்டால் போதாது
உணர்வு வேண்டும்
பாசம் வேண்டும் ...

என் அப்பாவி தமிழர் பலர்
படுகொலை செய்யப்பட்ட
போதும் போரில் வீர மரணம்
அடைந்த போதும் ஏற்பட்ட
வலியும் காயமும் என்றும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது நிற்கின்றது....

அவர்கள் அனைவரும்
என் தோழரே...
ஒவ்வொரு இலங்கை
தமிழனும் என் உறவே...
என் உடன் பிறப்பே....

இன்றும் எனக்கு பாசம் 
அதிகம் தான் என் இலங்கை
உறவுகளுடன் ...
அவர்கள் வலி என் வலியே..
நானும் உணர்கிறேன்
அந்த வலியை இன்று வரை
உணர்வேன் இந்த வலியை
என் வாழ்நாள் முடியும் வரை ...

இந்த நாள் நான் பிரிந்த என்
சொந்தங்களையும் அவர்கள்
உறவுகளையும் நினைத்து பார்த்து
அவர்களுக்காக இறைவனை
வேண்டிக்கொள்கின்றேன்
கண்ணீர் உடன்....

அன்பு பிச்சை


என்னை ஏளனமாக 
மட்டும் பார்த்து விடாதே
உன் அன்பை 
நான் பிச்சையாக
கேட்கிறேன் 
என்பதற்காக....