ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காதல்

நாமாக தேடி தேடி கிடைத்த காதல்
நிலைக்காது
தானாக நம்மை தேடிவந்த காதல்
மறையாது


திங்கள், 7 செப்டம்பர், 2015

வெற்றி


கனவுகள் நம் நினைவுகளின் வெளிப்பாடு
கற்பனை நம் ஆசையின் வெளிப்பாடு
வெற்றி நம் முயற்சியின் வெளிப்பாடு
தோல்வி நம் முயலாமையின் வெளிப்பாடு

தன்னம்பிக்கை


எந்த கையும் தேவையில்லை உதவிக்கு
உன் தன்னம்பிக்கை ஒன்று இருந்தால்
தனி ஒருவனாக
தரணியில் ஜெயம் பெறலாம்
நிச்சயம் !!!

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

என் கவி அழகா.

அழகா,
உன் விழி அழகா?
அழகா,
அதன் மொழி அழகா?
அழகா,
உன் குரல் அழகா?
அழகா,
உன் எழுத்து அழகா?
அழகா,
உன் கவி அழகா?
அழகா,
என் கவி அழகா?
அழகா,
கவி வரி அழகா?
அழகா,
அதன் கரு அழகா?
அழகா,
காதல் அழகா?
அழகா,
உன் வரிகளில்
வருவதினால்
அது அழகா?
என் அழகா!!!
என் கவி அழகா.....!!

கண்ணன்

கண்ணன்
எங்கள் கண்ணன்!!
இவன்
எங்கள் வீட்டு கண்ணன்!!
நாங்கள் கொஞ்சும்
கண்ணன்..
சின்னஞ் சிறு கண்ணன்
அழகான கண்ணன்
அன்பு மிக்க கண்ணன்
இவன்
எங்கள் வீட்டு கண்ணன்!!

வாழ்க வளமுடன் ...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....



மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.

மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.

அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியர்களை போற்றுவோம் .

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....

கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழா. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.


மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும்.

இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.