செவ்வாய், 26 ஜனவரி, 2016

மனதுடன் கூடிய உயிர்.

பொருட்களை பயன்படுத்தி விட்டு
தூக்கி வீசிவது போல்
மனிதர்களை தூக்கி வீசாதீர்கள்
மனிதர்களுக்கு
மனதுடன் கூடிய உயிர் இருக்கிறது

காதல்


என் காதல் உயிரானது
நம் காதல் மிக அழகானது
நம் செல்வம் அறிவானது
நம் குடும்பம் மகிழ்வானது
இந்த வாழ்க்கை வரமானது
இந்த இன்பம் நிலையானது..

நகைச்சுவை ....

நகைச்சுவை உணர்வோடு பிறந்தவர்களை விட
வேதனைகளை மறக்க மற்றும் மறைக்க
நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தியவர்கள்
தான் அதிகம் இங்கே ...

பாதுகாப்பு ...

அருகே அம்மா இருக்க
நிம்மதியாக உறங்கும்
சிறு மழலையாக,
உன் அருகாமையில்
மட்டுமே உணர்கிறேன்
எனது உச்சகட்ட
பாதுகாப்பை...

இனிய காலை வணக்கம் ...

மயில் தோகை மிக அழகு
மண்வாசம் அழகோ அழகு
பேசும் கிளியின் பேச்சழகு
வீசும் தென்றலும் அழகு
விளக்கின் ஒளி அழகு
கொட்டும் மழை அழகு
கொஞ்சும் மழலை அழகு
கெஞ்சும் மனைவி அழகு
கெண்டை கால் கொலுசழகு
இனிக்கும் என் தமிழ் அழகு
இதை படிக்கும்
என் நண்பர்கள் அழகோ அழகு....
இனிய காலை வணக்கம் ...

அழகு வெண்ணிலவே ...

முழு நிலவாய் நீ அழகு
பிறை நிலவாய் நீ அழகு
குளிர் நிலவாய் நீ அழகு

நீல வானில் நீ அழகு
மேகத்தில் நீ அழகு
வெண்ணிலவே நீ அழகு

தேய்ந்தாலும் நீ அழகு
வளர்ந்தாலும் நீ அழகு
என்றென்றும் நீ அழகு

என்னவளே நீ அழகு
நீ மட்டும் தானடி
பேரழகு....

வாழ்க்கை


நம் வாழ்க்கையை
நமக்காக மட்டுமே வாழாமல்
நமது நாட்டிற்காகவும்
நமது மக்களுக்காகவும்
நன்மைகள் பல செய்து
நலமுடன் வாழ்வோமே....

நம்பிக்கை...

என் அன்பிற்கு
மதிப்பில்லாமல் போனது
என் காதல்
இங்கே கனவாகி போனது
என் கண்ணீரும்
வற்றி வீணாகிப் போனது
என் உயிருக்கும்
மதிப்பில்லாமல் போனது
என் துணைக்கு
உறவில்லாமல் போனது
என்ற போதும்
உயிர் வாழ்கிறேன்!!!
என்னை உதறி போன
உறவுகள் தேடி வரும்
என்ற நம்பிக்கையில்!!!

அழகா வேண்டுமா???


அழகா வேண்டுமா???
அழகு நிலையம் செல்ல வேண்டாம்
வெள்ளை தோல் வேண்டாம்
குளிர் சாதனம் வேண்டாம்
பழச்சாறுகள் வேண்டாம்
பணம் வேண்டாம்!
நகை வேண்டாம் !
சிறு புன்னகை போதும்
நல்ல மனதுடன் சிறு புன்னகை !!

சுகமே..

நீ வரமாட்டாய் ,
வந்தாலும் பேசமாட்டாய்
என புத்திக்கு தெரிந்தும்
உனக்காக உன் நினைவில்
காத்திருப்பதில் சுகமே....

அன்பு


உடன் இருக்கும் தருணங்களை விட
உயிர் பிரியும் தருணத்திலேயே
உண்மையான அன்பு உணரப்படுகிறது...

உன்னை தேடி தேடி..


உன் விழியின் வழியே
உன் மனதிற்குள் புகுந்து
உன் உயிரில் கலந்து
உன் வாழ்க்கை துணையாக
உன் உடன் வாழவே
உன் பார்வையில் படுகிறேன்
உன்னை தேடி தேடி ...

காதல் செய்வேன்....

தவம் செய்து
காத்திருக்கிறேன்
கணவனாக நீ வர
கண்களின் இமையாக
காத்து உன்னை
காலம் முழுதும்
காதல் செய்வேன்...

கற்பனை


கற்பனைக்கு என்றுமே
மதிப்பு அதிகம்!!
அது நமக்கு பிடித்ததாக
இருப்பதினால் !!

என் கனவு நீ!!

என் நீண்ட தேடலில்
எனக்காக கிடைத்த
என் உயிர் நீ!!
என் உலகத்தின்
எனக்காக பிறந்த
என் கனவு நீ!!

மலர்கள்!!

அழகுக்கு
அழகு சேர்க்க
இறைவனால்
படைக்கப்பட்ட
இன்னொரு
அழகிய
படைப்பு
மலர்கள்!!

காதல்


காதலாக நினைக்கும்
அனைத்தும்
உண்மையும் அல்ல!!
உண்மை காதல்
பலருக்கு
புரிவதும் இல்லை!!
தெரிவதும் இல்லை..

மாயக்காரன் மாமன்


மனதில் காதல்
மலரை
மலரச் செய்து
மாயமானான்
மாயக்காரன்!!
மயக்கும் விழியில்
மனதை
மயக்கிய என்
மாமன் ...

மன்னிப்பு தண்டனை

தெரியாமல் செய்த தவறுகளுக்கு
மன்னிப்பு உண்டு
தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு
தண்டனை உண்டு

அன்பின் பிறப்பிடம் ...


நீ தேடிய இதயத்தை விட
உன்னை தேடிய
இதயத்தை நேசி
அதுவே
அன்பின் பிறப்பிடம் ...

புத்திசாலித்தனம்...

வரவுக்குள் செலவை
குறைப்பது புத்திசாலித்தனம்...

ஆனால் ,

செலவிற்கு தேவையான அளவு
வரவை அதிகரிப்பது அதிபுத்திசாலித்தனம்..

happy Christmas...


Life .....

Life is not a mobile game...
Can't play it again and again..
We can play only one time...
So be careful friends...

காதல்

காய்ந்த மரமும் துளிர்த்தது
காகித மலரும் மணத்தது
காலைக் கதிரவன் நிலவாக மாற
காதல் சொன்னாய் என் காதினில்!!

அருமை பெருமை


எளிதாக கிடைக்கும் எதன் அருமையும்
தெரிவதில்லை யாருக்கும்!!
நம்மிடம் இல்லாதபோதே உணர்கிறோம்
உண்மையான பெருமையை ...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அழகான வருடப் பிறப்பு ...

அழகான வருடப் பிறப்பு
ஆசையோடு எதிர்பார்த்து
அகிலம் முழுவதும் கொண்டாடும்
அழகான வருடப் பிறப்பு ... 

ஆண்டுகள் ஏற ஏற
அகவை ஏறினாலும்
அகம் மகிழ வைக்கும்
அழகான வருடப் பிறப்பு ..

அதிசயமே அசந்து போகும்
அழகான நன்னாள்
அழகிய பொன்னாள்
இன்னாள் ...

வாழ்த்துக்கள்.

உண்மை காதல்!!!

அழகுக்கு முக்கியத்துவம்
தருவது காதல் ...
அன்புக்கு முக்கியத்துவம்
தருவது
உண்மை காதல்!!!

அழகு

அன்பாக
பண்பாக பாசமாக
உண்மையாக பழகும் அனைவரும்
அழகு தான் ...

உபகாரம்...

உதவாவிட்டாலும் சரி
உபத்திரம் செய்யாமல் இருப்பது
உன்னை நேசித்த உள்ளத்திற்கு
நீ செய்யும் உபகாரம்...

சூழ்நிலை சந்தர்ப்பம்


கெட்டவர்களாக யாரும் பிறப்பதில்லை
நல்லவர்களாக யாரும் வளர்வதில்லை
சூழ்நிலை சந்தர்ப்பமே
சாயத்தை பூசுகிறது
மனிதர்களின் முகங்களில் ...

வலி


கண்ணீர் சிந்தும் கண்களை விட
அதை மறைத்து புன்னகைக்கும்
உதடுகளுக்கே வலி அதிகம் ...

உன்னையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!!

உனக்காக எதையும்
விட்டுக்கொடுப்பேன்
என்பதற்காக
உன்னையும்
விட்டுக்கொடுக்க
மாட்டேன்!!

மகிழ்ச்சி...சோகம் ..

மனம்
மகிழ்ச்சியாக
இருந்தால்
ஆடு கத்தும்
ஓசையும்
இசையே!!!

மனம்
சோகமாக
இருந்தால்
ஏ.ஆர் டியுன்
இரைச்சலே.

இனிய இரவு வணக்கம் ...

இரவு இனிதாக
விடியல் புதிதாக
வாழ்க்கை வளமாக
வாழ்த்துக்கள் ..
இனிய இரவு வணக்கம் ...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ....

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ....

தனிமை

தனியாக இருக்கும் வரை
தனிமை சுட்டதில்லை
துணையாக ஒருவர் வந்து
தனிமையை பரிசாக
தந்துவிட்டால்
துயருக்கு அளவில்லை....

ஏமாற்றமும் வலிகளுமே !!!

உன்னை நேசித்த இதயத்தை நேசித்தாலும்
நீ நேசித்த இதயத்தை நேசித்தாலும்
கிடைப்பது ஒன்றே
ஏமாற்றமும் வலிகளுமே !!!