வியாழன், 30 ஏப்ரல், 2015

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்


உழைப்பாளர்கள் இல்லை
என்றால் உலகமே இல்லை
உலகின் ஒவ்வொரு துரும்பும்
உங்களால் மட்டுமே
அசைக்கப்படுகின்றது
ஏன் உருவாக்கப்படுகின்றது...

உங்களின் வியர்வை சிந்த
உடலை ஓடாக தேய்த்து
ஓய்வின்றி உழைத்து
உலகை முன்னேற்றும்

நீங்கள் இல்லை என்றால்
இந்த உலகமும் இல்லை
வாழ்க்கையும் இல்லை
இந்த நன்னாளாம் 

உங்கள் பொன்னாளில்

உழைத்து உழைத்து ஓடாக
தேய்ந்த ஒவ்வொரு வீட்டின்
முதுகெலும்பான தந்தைகளுக்கும்
எல்லா நொடியும் எறும்பு போல்
உழைத்துக் கொண்டிருக்கும்
அன்பு தாய்மார்களுக்கும்

குடும்பத்தை தன் தோலில்
சுமக்கும் அண்ணாக்களுக்கும்
அண்ணன் இல்லாத வீட்டில்
அண்ணாவாக உழைக்கும்
அன்பான அக்காக்களுக்கும்

செல்ல குட்டி சின்ன தம்பி
செல்ல தங்கைகளுக்கும்
உலக நண்பர்கள் அனைவருக்கும்
என் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

உறவுகளை வரிசை படுத்தலாம்
ஆனால் உழைப்பாளர்களை
வரிசை படுத்த முடியாது ...

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி.....

Happy Birthday Thala



அமராவதி அர்ஜூன் முதல் 
என்னை அறிந்தால் 
சத்யதேவ் வரை 
எத்தனை எத்தனை 
முகங்கள் உனக்கு
மாற்றங்கள் உன் 
நடிப்பில் மட்டுமே இருந்து
என்றென்றும் மாறாதது 
உன் அன்பு உள்ளம்...

காதல் மன்னன் உள்ளம் கவர் காதலனாக
பூவெல்லாம் உன் வாசம் நண்பனாக 
என்னை அறிந்தால் அப்பாவாக
தீனா அண்ணனாக
முகவரி தம்பியாக 

உன்னை கொடு என்னை தருவேன் army man ஆக
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் director ஆக
அவள் வருவாளா முற்போக்கு சிந்தனையாளனாக
சிட்டிசன் புரட்சியாலனாக
உன் அட்டகாசமான நடிப்பால் எங்களை கவர்ந்து

ராசி மைனர் மாப்பிள்ளை
Stylish பில்லாவாக
மங்காத்தா வில்லனாக
தமிழ் சினிமாவை அமர்க்களப்படுத்தி

பரமசிவன் திருப்பதி ஆஞ்சநேயா ஜனா ஜீ ஆழ்வார் என பகைவனுக்கு அருள்பவராக

ரெட்டை ஜடை வயசில் கல்லூரி வாசல் பவித்ரா வான்மதி உல்லாசம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்னை தாலாட்ட வருவாளா வாலி ரெட் உயிரோடு உயிராக என்று மாபெரும்  காதல் கோட்டை கட்டி

நேசம் உடன் ஆசை ஆக உன்னை தேடி வரும் ரசிகர்ககளின் பாசமலர்கள் ஆக ஆனந்த பூங்காற்றே நீ வருவாய் என ராஜாவின் பார்வையிலே ஆரம்பம் முதல் வரவேற்று உபசரித்து தொடரும் நம் உறவு என்று அசல் தலைவனாகவும்

வரலாறு போற்றும் ஏகன் ராஜா வாக கிரீடம் சூட்டி வீரம் உடன் எங்கள் மனதில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும்  நீ பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் ....

என்றும் அன்புடன் 
பொற்செல்வி மதிவாணன்​

Happy Birthday Thala



புதன், 29 ஏப்ரல், 2015

காதல்


நீ எங்கோ இருக்க
நான் எங்கோ இருக்க
சிக்கித் தவிக்கின்றது
காதல் நினைவுகளில்
நம் நிறைவேறா காதல்
நமக்கிடையில்
என்றென்றும்
கண்ணீருடன்.....

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்

திங்கள், 27 ஏப்ரல், 2015

என் அழகு நிலவு பெண்ணே...



எனக்கும் கொஞ்சம்
தலைக்கணம் தான்
நிலைக்கண்ணாடி
முன் நிற்கும் போது
நான் தான்
பேரழகி என்று!!!
உன்னை பார்த்து
தலை கவிழ்ந்தேன்
உன் அருகில்
நிற்க கூட தகுதி
எனக்கில்லை என்று
என் அழகு நிலவு பெண்ணே...

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்

நிலவு பெண்



பகலவன் வரவால்
பகலில் ஓய்வு
இரவின் மடியில்
பளிச்சிடும்
பளிங்கு போன்ற
நிலவு பெண்ணுக்கு!!!

அந்திமாலை
நிலவின் வரவால்
இரவில் ஓய்வு
சுட்டெரிக்கும்
சூரியனுக்கு ....

என்றும் அன்புடன்
பொற்செல்வி......

சனி, 25 ஏப்ரல், 2015

மாற்றுத்திறனாளிகள்


மாற்றுத்திறன்
அல்ல
மொத்தத்திறன்
கொண்டவர்கள்
இவர்களே....

எல்லாம் சரியாக
இருந்தும் உழைப்பை
விட்டு விட்டு பசிக்காக
யாசித்து உயிர் வாழும்
நடை பிணங்களுக்கு
மத்தியில் !!

தம் தனித் திறமையை
மட்டும் மேம்படுத்தி
அதை மூலதனமாக
வைத்து உழைத்து
வாழும் வர்க்கம்

கண்கள் கூட காதுகளாகவும்
காதுகள் கூட கண்களாகவும்
பேச்சு கூட சைகைகளாகவும்
கைகள் கூட கால்களாகவும்
கால்கள் கூட கைகளாகவும்
மாறித்தான் போனது....

தன்னம்பிக்கை
தைரியம்
துணிவு
உழைப்பு
உண்மை
என்ற ஐம்புலன்களை
நம்பி வாழ்பவர்கள்....

நம் பரிதாபமும் பச்சாதாபமும்
தேவையில்லை அவர்களுக்கு..
அவர்களுக்காக இரக்கப்பட்டு
பேசாமல் ஒரு முழுமனிதனாக
நினைத்து அன்புடன் பேசுங்கள்

வாழ்த்துக்கள்
வாழவிடுங்கள் ...

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

இரு மலர்கள்



காலையில் காதலோடு
உன் கார் கூந்தலில்
என்னை சூடி...
உன்னை அலங்கரித்து
என்னையும் அலங்கரித்து
மாலையில்
வெறுப்புடன் என்னை
தூக்கி எறிகிறாய்!!
நான் என்ன
உன் ஓர் நாள்
காதலனா??.....

உறவு







பகுத்தறிவில்லா ஆடு 
கூட வசிக்கிறது 
அழகான மந்தைகளாக 
ஆனால் பகுத்தறிவுள்ள 
அழகான மனிதனோ 
வசிக்கிரான் 
தனித் தனி  தீவாக 
ஒட்டும் இன்றி 
உறவுமின்றி 
எல்லாம் இருந்தும் 
ஏதுமில்லா 
அநாதையாக.....

பெண்மையின் முகத்திரை





முகத்திரை
போட்டுத்தான்
திரிகிறேன்....
சுட்டெரிக்கும்
சூரியனுக்கு
பயந்து அல்ல!!!
சுண்டி இழுக்கும்
உன் காந்த பார்வை
மட்டுமே என்
பெண்மையை
ரசிக்க வேண்டும்
என்பதற்காக...



செவ்வாய், 21 ஏப்ரல், 2015

மனம்


வானம் கூட பக்கம் தான்
நம் மனதில் துணிவிருந்தால்
நம் நிழலும் கூட தூரம் தான்
நம் மனம் துவண்டிருந்தால்

அட்ஷயதிதி



அட தமிழா!
இங்கே ..

வறுமைக்கும் குறைவில்லை
வளத்திற்கும் குறைவில்லை

பசிக்கும்
பட்டினிக்கும்
கூட
பஞ்சமில்லை...

நகைக்கடையில்
அட்ஷயதிதியின்
கூட்டத்திற்கும்
அளவில்லை....

சின்னஞ்சிறு
அடகுகடையிலும்
கூட்டம்...

பெரிய நகைக்கடையிலும்
கூட்டம்...

அங்கே அடகுவைக்க
இங்கே வாங்கி குவிக்க......

பணத்தை தேடி


பணத்தை தேடித்தேடி
அன்பை மறந்து
நேசதை இழத்து
பாசத்தை காட்டாமல்
மனதை காயப்படுத்தி
காதலை தவிர்த்து
உறவை தொலைத்து
நட்பை நம்பாமல்
காலத்தை வீணாக்கி
வெற்றியை பறிகொடுத்து
தோல்வியில் சிக்கித்தவித்து
உயிர் பிரியும்போது
சாதல் நிகழும்போது
அநாதை ஆக நிற்காதே.......

திங்கள், 20 ஏப்ரல், 2015

மூன்றெழுத்து




பணம் என்ற மூன்றெழுத்தை தேடித்தேடி 
அன்பு என்ற மூன்றெழுத்தை மறந்து 
நேசம் என்ற மூன்றெழுத்தை இழத்து
பாசம் என்ற மூன்றெழுத்தை காட்டாமல் 
மனம் என்ற மூன்றெழுத்தை காயப்படுத்தி
காதல் என்ற மூன்றெழுத்தை தவிர்த்து 
உறவு என்ற மூன்றெழுத்தை தொலைத்து
நட்பு என்ற மூன்றெழுத்தை நம்பாமல்
காலம் என்ற மூன்றெழுத்தை வீணாக்கி
வெற்றி என்ற மூன்றெழுத்தை பறிகொடுத்து 
தோல்வி என்ற மூன்றெழுத்தில் சிக்கித்தவித்து
உயிர் என்ற மூன்றெழுத்தை பிரியும்போது
சாதல் என்ற மூன்றெழுத்து நிகழும்போது 
அநாதை என்ற மூன்றெழுத்தாக நிற்காதே.......

ரோஜாவிற்கும் முள்ளுக்கும் காதல்...



ரோஜாவிற்கும்
முள்ளுக்கும்
ஆழமான
காதல்...

ரோஜாவை
பறிக்க
தாக்குதல்
நடத்துகிறது
காதலியை
பிரிப்பதால்.....

ஆழ் துளை கிணறு


ஆள் இல்லா வேலையிலே
மூடி இல்லா ஆழ்
துளை கிணற்றினிலே இளந்தளிர்கள்
விழுந்து துடி துடித்து மடிகையிலே...
இடி விழுகிறது என் நெஞ்சினிலே....
ஆழ்
துளை கிணற்றுக்கு
மூடி போட்டு
நம் பிஞ்சு உயிர்களை காப்போம்
பாதுகாப்பாக வளர்ப்போம்......

என் இதயம் ...



என் கல்லறையிலும்
கூட உன்
பெயர் மட்டும்
ஓயாமல்
ஒலித்துக்
கொண்டிருக்கும்.....

அங்கே
என் இதயம் ...
உன்னை
நினைத்து
நினைத்து
துடித்துக்
கொண்டிருப்பதால்....

வியாழன், 16 ஏப்ரல், 2015

தமிழர் படுகொலை




துளி தான் என்றாலும்
பெரு வெள்ளம்
பேர்அமிர்தமென
கண்ணில் ஒற்றி
வாயில் போடும்
திருப்பதி லட்டும் கூட
ஆலகால விடமாகத்தான்
கசக்கின்றது எனக்கு
என் அப்பாவி தமிழர்
படுகொலைக்கு பிறகு
எட்டி எட்டி பார்க்கும்
ஏழுமலையான் கூட
எனக்கு எதிரியாக
தான் தெரிகிறான் இன்று ...

புதன், 15 ஏப்ரல், 2015

காந்த விழி



உலகெங்கும் தேடி தேடி
கண்டேன் உன் அழகிய
இரு காந்த விழிகளை

கூர்மையான ஆயுதமாக
என்னை தொலைக்கிறது
இன்றும் உன் இரு கண்கள்

காதல் கொண்டேன்
அதன் ஈர்ப்பு விசையில்
பறிகொடுத்தேன்
என் மனதை

பின்பு தான் நான்
உணர்தேன் உன்
அழகிய விழிகளுக்கு
ஒளியை உணரும்
சக்தி இல்லை என்று

நான் உன் இரண்டு
கண்களுக்கு ஒளியாக
இருக்க விழைகிறேன்
ஒவ்வொரு நொடியும்

நம் வாழ்க்கை முழுதும்
ஏற்றுக்கொள்வாயா
என்னை உன் விழியாக......


என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்

கடவுள்



கடவுள் உருவம்
அழகோ அழகு
கடவுள் அன்பு 
தாயின் பாசம் 
கடவுள் மொழி 
ஞான வேதம் 
கடவுள் பகுத்தறிவு
உன் உள்ளேயே கடப்பது 
கடவுள் உண்மை 
உணர்ந்து கொள்வது 
கடவுள் அமைதி 
நம் மனதிற்கு கிடைப்பது 
கடவுளை உணர்தவன் 
புனிதன் மனிதன் ....

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

காதல்



காலங்கள்
ஓடினாலும்
ஜன்மங்கள்
மாறினாலும்
நம்மை விட்டு
ஓடாத ஒன்று
காதல் ...

கல்வி தொடங்கும் முதல் நாள் இன்று



குழந்தைகளின் அழுகுரல் ஒலி
ஐயகோ கேட்க முடியவில்லை
ஓலங்களாக ஒலிக்கிறது
என் இரு காதுகளில்

வலியால் துடிக்கிறது உள்ளம்
கண்களில் கண்ணீர் துளிகள்
பதற்றம் தொற்றிக்கொண்டு
பிதற்றுகிறது மனது

ஏனோ தெரியவில்லை
மனம் முழுக்க முழக்க
பயமும் பதற்றமும்
படுத்துகிறது என்னை

காதுகள் கேட்கும் திரனை
இழந்துவிட கூடாதா
என முதல் முறையாக
ஏங்குகிறது என் உள்ளம்

ஆம் முதல் நாள் இன்று
ஆம் குழந்தைகளின்
கல்வி தொடங்கும்
முதல் நாள் இன்று .....

By.... என்றும் அன்புடன் 
பொற்செல்வி மதிவாணன்

திங்கள், 13 ஏப்ரல், 2015

சோகமும் கண்ணீரும்




சோகம் நம்மை
தாக்கும் போது
நம் மனதிற்கு
சுகம் தருவது
நாம் சிந்தும் 
நம் இரு துளி
கண்ணீர் மட்டுமே.....


By.... என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

இதயம்



இதயம் நொருங்க
நீ பேசிவிடாதே
கண்ணீர் அல்ல
இரத்தமே வடிகிறது
என் இதயத்தில் ....


By.... என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

பெண்ணே என் கண்ணே



பெண்ணே
என் கண்ணே
நீ
ஒன்று
பேசி பேசிக் கொல்கிறாய்
இல்லை எனில்
பேசாமல் கொல்கிறாய்
இரண்டிற்கும்
இடைப்பட்ட
இடத்திற்குள்
நீ வருவது என்பது
எப்பொழுது
நடக்குமோ
என் செல்லம்
நான் மகிழும்
நொடியும் கூட
அது தானடி
என் தங்கம்.....

By.... என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கடற்கரை


அழகில் உனக்கு நிகர் இல்லையடி
உன் நீல நிறமும் அதன் அழகும்
என் இரு விழிகள் போதாது
அதை நான் ரசிக்க

தூரத்தில் அமைதி
அருகில் ஆக்ரோசம்
பொங்கிவரும் வெண் நுரை
என அழகாக நீ இருக்க

நீ என்னை தொட்டு தொட்டு
முத்தமிட்டுப் போவதும்
நான் உன்னை அள்ளி அள்ளி
முத்தமிட நினைப்பதும்

என்னவன் கைபிடித்து
நான் உன்னிள் நடப்பதும்
எம்மிருவர் கால் தடங்களை
நீ கலைத்து விட்டு போவதும்

உன் மண்ணில் என் பெயரெழுத
அதை நீ அலைப்பதும்
ஒவ்வொரு முறையும்
உன்னை நான் சந்திக்கும்
போது நடக்கும் வாடிக்கைதான்
ஆனாலும் அதன் சுவாரசியம் மட்டும்
இன்றும் குறையவே இல்லை
பல நூறு முறை நடந்தாலும்

என் உயிர்தோழனாய்
உன்னுடன் நான்
உரையாடிய நிமிடங்கள்
தனிமையில் உன் உடன்
நான் பேசி பேசி
பல அடி முன் வைக்க
உன் ஆக்ரோசத்தால்
நீச்சல் தெரியாதடி உனக்கு
என நீ நினைவுருத்த
உடன் நான் பின்வாங்க

எனக்கும் ஆசை தான்
உன்னுடன் முழுதும் உறவாட
நான் உன்னை நெருங்கும் போது
என் பெண்மையின் வெட்கம்
என்னை தடுத்து நிறுத்த

உன்னை விட்டு பிரிய மனமின்றி
திரும்ப திரும்ப திரும்பி
பார்த்து அடி மேல் அடி
வைத்து நான் நடக்க

உனக்காக நான் காத்திருப்பேன்
என நீ என்னை வழி அனுப்ப
விடைபெற்றேன் உன்னிடம்
வெகு விரைவில் உன்னை
மீண்டும் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில்....

என்றும் அன்புடன்
அ.பொற்செல்வி மதிவாணன்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....





கடலா கடல் அலையா 
என என்னை வியக்க வைத்த 
என் சின்னஞ்சிறு கிராமத்து 
கடைவீதியில் பெருங்கூட்டம்

பூக்கடையில் பெருங்கூட்டம் 
பழக்கடையில் பெருங்கூட்டம்
பலசரக்கு கடையிலும் பெருங்கூட்டம்
ஏனோ எப்பொழுதும் கூட்டத்தை 
வெறுக்கும் என் மனம்

இன்றோ மிக மிக 
மகிழ்ச்சியாக உணர்கிறது
ஆம் என் தமிழும் தமிழினமும்
இன்னும் பல நூறு கோடி 
ஆண்டுகள் வாழும் என்று....

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

என்றும் அன்புடன் 
அ.பொற்செல்வி மதிவாணன்

வியாழன், 9 ஏப்ரல், 2015

காதலும் குடும்பம்


குடும்பம் என்ற கோவிலில் 
தீபம் என்ற காதலால் 
நட்பு என்ற தோரணங்களினால்
அலங்கரிக்கவே ஆசைப்படுகிறேன் 
என் வாழ்க்கையை ....

எங்கே செல்கிறது என் தேசம்




எங்கே செல்கிறது என் தேசம்
தமிழர் தமிழர் என்று
பெருமை கொண்டோம்
ஈராயிரம் ஆண்டுகள்
பழமை என்று
உவகை கொண்டோம்


இல்லை இல்லை
இருபதாயிரம் ஆண்டுகள்
தொன்மை என்று
மெய்சிலிர்த்தோம்
செம்மொழி செம்மொழி
என்று போற்றி புகழ்ந்தோம்

பாரதியும் கண்ணகியும்
வாழ்ந்த புரட்சி தேசமிது
உமையாளுக்கு சம உரிமை
கொடுத்த சிவனை
தொழும் புண்ணிய
பூமி இது

ஆனால் இன்றோ?
ஐயகோ...
எங்கே போகிறது என் தேசம்

தமிழுக்கு மதிப்பதில்லை
ஊருக்கு மழை இல்லை
உழவனுக்கு உணவில்லை
பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை

அதைவிட கொடுமை
என் சின்னஞ்சிறு
பிஞ்சுகளையும்
விட்டு வைப்பதில்லை
காம கொடூரர்கள்

பசியால் இறக்கலாம்
பிணியால் இறக்கலாம்
போரால் இறக்கலாம்
ஏன்
இயற்கை சீற்றங்களினாள்
கூட இறக்கலாம்

பண்பிழந்து
கற்பிழந்து
மானமிழந்து
பயத்துடன்
ஒவ்வொரு நிமிடமும்
வாழ்வதை விட

ஒட்டுமொத்தமாக
எங்களை எடுத்துக்கொள்ளும்
என் இயற்கை தாயே.....

புதன், 1 ஏப்ரல், 2015

நிரந்தரம் இல்லை


Australia won the match....




விதி விளையாடியது 
நீங்கள் விளையாடவில்லை 

நீங்கள் விளையாடாததால்
இந்தியா வெற்றி பெறவில்லை

இந்தியா வெற்றி பெறாததால்
எங்கும் மகிழ்ச்சி இல்லை 

வெற்றியும் தோல்வியும்
நிரந்தரம் இல்லை

ஆம் என்றென்றும்
இதுவே நிரந்தரம் இல்லை .....

கானல் நீர்





நீரால் நிரம்பிய 
இப்பூமியில்
நீருக்கு பஞ்சம் 
மனிதர்களால் நிரம்பிய 
இவ்உலகில் 
மனித நேயத்திற்கு 
பஞ்சம்
பாழாய் போன வானம் 
பொய்த்துப் போனதோ
கானல் நீரும் கூட 
இங்கு கனவு ஆனதோ
மேகம் என்று
மழை தூவுமோ
என்று தான் நம் 
தாகம் தீர்ந்திடுமோ...