சனி, 26 செப்டம்பர், 2015

மகிழ்ச்சி


சில நேரங்களில்
நாம் எதிர்பார்க்காமல்
நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு 

ஈடு இணை ஏதும் இல்லை ...

காதல்


சிந்திக்க விடாமல்
சிந்தனையை
சிதைத்து
சிதரடிக்கும்
சிக்கலின்
பெயர் தான்
காதல் ....

அன்பு


மறக்க நினைக்க நினைக்க
மறக்க முடியா உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் உயிர் பெற
மரணமும் கூட பிரிக்க இயலா
மாசற்ற அன்பு - என்னை
அடக்கம் செய்தாலும்
அழியப் போவது இல்லை....

இணைவோம் நட்பினால்


நட்பினால் இணைந்தோம்;
அன்பாக பழகி மகிழ்ந்தோம்...
சண்டைகள் பல போட்டு
மீண்டும் மீண்டும் இணைந்தோம்...
வேதனை இல்லா பல சண்டை ..
வேதனை தந்து பிரிவை தந்தது...
விலக்கி வைத்து வேடிக்கை காட்டுது ...
விடியலில் வலியை மறந்து
இணைவோம் நட்பினால்...

காதல்


கண்ணும் கண்ணும் நோக்க
காதலினால் நான் தவித்து
கரம் பற்ற நினைக்க
கவி பல படைத்து
காதல் செய்கிறேன் - என்
கனவு காதலனை
கற்பனை என்ற என்
கனவு சாம்ராஜ்ஜியத்தில்

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வாழ்க்கை லட்சியம்


உன் தன்னம்பிக்கையை விட
உன் தோல்வி பெரிதல்ல
உன் உழைப்பை விட
உன் வறுமை பெரிதல்ல
உன் முயற்சிகளை விட
உன் வெற்றி பெரிதல்ல
உன் வாழ்க்கையை விட
உன் லட்சியம் பெரிதல்ல.....

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ..விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ...

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.

பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.

மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.

தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
நான் செய்த பிள்ளையார் குடை.....


உன் காதலனாக


தூது போக
பறவை இருந்தும்
நானே பறந்து வந்தேன்
சேதி சொல்ல!!!
தூதுவனாக அல்ல
உன் காதலனாக....

தமிழை மிஞ்சிய மொழி


மல்லிகையை மிஞ்சிய மலரும் இல்லை
புன்னகையை மிஞ்சிய பரிசும் இல்லை
அன்னையை மிஞ்சிய உறவும் இல்லை
தமிழை மிஞ்சிய மொழியும் இல்லை......

கணவன் மனைவி


கணவன் Zero என்றாலும்
Hero தான் மனைவிக்கு!!

மனிதநேயம்மனிதநேயம் மிக்க மனிதர்கள்
இப்புவியில் இருக்கும் வரை
மனிதகுலமும் உலகமும்
உயிரோடு இருக்கும்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

கனவு

உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க
உறங்காமல் விழித்துக்
கொண்டிருக்கிறேன் - நீ
உறங்கும் நேரங்களில்!!!

‪பணம்‬ ‪விவசாயி‬

மண் வாசம் வீசும்
உன் மீது
என் வாசம் வீச
காத்துகிடக்கிறேன்
நடக்காது என தெரிந்தும்??

உண்மை காதல்

எனக்கு நீ பொருத்தமானவன்
என்பதை விட
உனக்கு பொருத்தமானவளாக
நான் இருப்பேன்
என்பதே உண்மை காதல் ...

என் காதலை!யாருக்கும் தெரியாமல்
நெடுநாளாக
நெஞ்சுக்குள்
பொத்தி வைத்தேன்
என் காதலை!!!
உன்னிடம் மட்டுமே
முதலில் சொல்ல!!!
ஆனால் நீயோ,
ஊருக்கும்
சொல்லிவிட்டாய்
உலகிற்கும்
சொல்லிவிட்டாய்..
ஏனோ தெரியவில்லை?
என்னிடம் கூற
மட்டும்
இன்னுமென்ன
தயக்கம்
உனக்கு என்னவனே???

தேவை

தேவைப்படும் போது கிடைக்காத எதுவும்
தேவையில்லாத போது கிடைத்தால்
அதன் மதிப்பிழந்து போகும்

காதல்

போலி காதலில் வென்று
காலம் முழுவதும்
நிம்மதி இழந்து
வாழ்வதை விட
உண்மையான
காதல் தோல்வியுடன்
காலம் முழுக்க அந்த
நினைவுகளுடன்
தனித்து வாழ்வது மேல்....

மரங்கள்

ஆத்தங்கரை இல்லை
நம் தலைமுறைக்கு!!
கிணற்றடி இல்லை
இந்த தலைமுறைக்கு!!
குடிநீரே இல்லாமல்
போய்விடும்
அடுத்த தலைமுறைக்கு ???
மரங்கள்
இல்லாமல் போவதால்??

காதல்

நாமாக தேடி தேடி கிடைத்த காதல்
நிலைக்காது
தானாக நம்மை தேடிவந்த காதல்
மறையாது


திங்கள், 7 செப்டம்பர், 2015

வெற்றி


கனவுகள் நம் நினைவுகளின் வெளிப்பாடு
கற்பனை நம் ஆசையின் வெளிப்பாடு
வெற்றி நம் முயற்சியின் வெளிப்பாடு
தோல்வி நம் முயலாமையின் வெளிப்பாடு

தன்னம்பிக்கை


எந்த கையும் தேவையில்லை உதவிக்கு
உன் தன்னம்பிக்கை ஒன்று இருந்தால்
தனி ஒருவனாக
தரணியில் ஜெயம் பெறலாம்
நிச்சயம் !!!

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

என் கவி அழகா.

அழகா,
உன் விழி அழகா?
அழகா,
அதன் மொழி அழகா?
அழகா,
உன் குரல் அழகா?
அழகா,
உன் எழுத்து அழகா?
அழகா,
உன் கவி அழகா?
அழகா,
என் கவி அழகா?
அழகா,
கவி வரி அழகா?
அழகா,
அதன் கரு அழகா?
அழகா,
காதல் அழகா?
அழகா,
உன் வரிகளில்
வருவதினால்
அது அழகா?
என் அழகா!!!
என் கவி அழகா.....!!

கண்ணன்

கண்ணன்
எங்கள் கண்ணன்!!
இவன்
எங்கள் வீட்டு கண்ணன்!!
நாங்கள் கொஞ்சும்
கண்ணன்..
சின்னஞ் சிறு கண்ணன்
அழகான கண்ணன்
அன்பு மிக்க கண்ணன்
இவன்
எங்கள் வீட்டு கண்ணன்!!

வாழ்க வளமுடன் ...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.

மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.

அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியர்களை போற்றுவோம் .

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் .....

கிருஷ்ண ஜெயந்திகிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழா. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.


மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும்.

இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

‪திருமண‬ ‎நாள்‬

காதலனுடன் காதலி
கரம் கோர்த்து
அக்னி தேவனை
அழகாக வலம் வந்து

ஆயிரம் ஆயிரம்
அன்பு உள்ளங்கள்
மனதார வாழ்த்தி
அட்சதை தூவ

மங்களமான
மஞ்சள் கயிறு
இருவரை
ஒருவராக
இணைத்து

கணவன்
மனைவியாக
புது பிறவி எடுத்த
நன்நாள் இன்நாள்

மதி மயக்கியடா நீ


மதி மயக்கியடா நீ - என்
மதியை மட்டுமே
மயக்கிய
மாயனடா நீ!!

முடி கோதி - உன்
மார்பில் சரிய,
மடியில் தவழ,
மயங்கி போகிறேன்!!!

உன் அனைப்பினில்
உன் அன்பினில்
உன் காதலில் !!!
என் மாயனே!!!

நிலா‬

மூன்று நாட்களாக
என்னை ஒருத்தி
ஏங்க வைக்கிறாள்
அவள்
அழகினால்!!!

அவள பாத்துகிட்டே
இருக்கலாம்
அப்படி
ஒரு அழகி!!!

அடுத்த ஜென்மத்தில்
ஆணாக பிறந்து
அவளை
காதலிக்கனும்!!!

என்ன ஆனாலும் சரி
காதலிக்கனும்
அவளை ......

தனிமை


உறவுகள் இன்றி
தனிமையில்
இருந்த போது கூட
தனிமையை
உணர்ந்ததில்லை!!!
உன்னுடன்
உரையாடிவிட்டு,
நீ இல்லாத போது
தனிமை
கொடுமையாக
சுடுகிறது.....

சனி, 5 செப்டம்பர், 2015

இதயம்படித்து படித்து கூறினாலும்
என் இதயம்
பார்க்க துடிப்பது உன்னையே!!

பார்க்க துடிக்கும் இதயத்தை
பார்க்கவிடாமல் தடுக்கும்
உன் விழிகள்!!!

பாசத்தை அள்ளி கொடுக்க
புரியாமல் சிரித்தாய்
மழலையாக!!

பாரா முகமாக நீ இருக்க என்
பாசம் மட்டும் குறையவே
இல்லை!!

பாவப்பட்ட இதயமாக
பரிதவிக்கிறது என் மனது!!

பனித்துளியாக நீ பிரிந்தாலும்
பாசத்தோடு உன் உடன்
இருப்பேன்...

பாலைவன சோலையிலே
பூத்து உதிர்ந்த சிறு மலராக!!!

உன் அன்பினிலே!


உன் மீது ஆயிரம்
கோபம் இருந்தாலும்
உன் அன்பான
குரல் கேட்டவுடன்
கரைந்து போகிறேன்
அதன் இனிமையிலே!!!!
என்னை மறந்து போகிறேன்
உன் அன்பினிலே!!!!

உயிரும் உடலுமே


பாசமும் நேசமும் அளவாக
இருந்தால் தோஷமில்லை!!!
நட்போ காதலோ
உயிராக உறவாக!!
உள்ளே புகுந்துவிட்டு,
உயிருடன் கலந்துவிட்டால்
பிரிக்க நினைத்தாலும்
அழிக்க நினைத்தாலும்
அழிவது உயிரும் உடலுமே....

நித்திரை


நிலையான நித்திரை எங்கே!!!!
நித்திரையை பரித்தவன் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே!
நினைக்க கூட இயலவில்லை
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை!!
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறேன்
நின் வரவிற்காக காத்துகிடக்கிறேன்
நிம்மதி இல்லா நிமிடங்களை
நின் நினைவுகளுடன் உயிர்பிக்கிறேன்...

Happy birthday darling...


Happy birthday darling...

இனிக்க இனிக்க
சுவைக்க சுவைக்க
மணக்க மணக்க
உங்கள் வாழ்க்கை
அமைய வாழ்த்துக்கள்

இவை யாவும்
உங்களுக்கு கிடைக்க
இறைவனை வேண்டுகிறேன் ...


மகிழ்ச்சி பொங்க
உங்கள் துணையாக
உடன் இருப்பேன்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

ரக்ஷா பந்தன்


ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை.

பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண் அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

அன்பு மழையில் நனைகிறேன்

மழையில்லாமல் நனைகிறேன்
சுடும் வெயிலை ரசிக்கிறேன்
இறக்கை இன்றி பறக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் சேர துடிக்கிறேன்
ஏங்கி ஏங்கி இளைக்கிறேன்
உன் உறவாக விழைகிறேன்
என் உயிராக நினைக்கிறேன்
அன்பு மழையில் நனைகிறேன்

வரலட்சுமி விரதம்


வரலட்சுமி விரதம் லட்சுமி தேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக் கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

விரத முறை: இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :

லட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்!

இனிய ஓணம் நல்வாழ்த்துகள் ...


ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன.

இனிய ஓணம் நல்வாழ்த்துகள் ...

திகட்டாமல் கதை சொன்னாய்


திகட்டாமல் கதை சொன்னாய்
தினம் தினம் அழகாக சொன்னாய்

கற்பனையில் பல சொன்னாய்
கருத்தாகவே நீ சொன்னாய்

மனதை கவர நீ சொன்னாய்
மகிழ்விக்கவே சொன்னாய்

ஒரு நாள் நம் பிரிவுக்கும்
ஒரு கதை சொன்னாய்

என்னை பிரிந்து விட்டாய்
எங்கோ பறந்து விட்டாய்....

அன்னை தெரசா


அன்னை தெரசா
(Mother Teresa)
பிறந்த தினம் இன்று ஆகஸ்டு 26, 1910 .
இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.

அன்னை அவள்
அன்பானவள்
அன்பின் மறு உருவானவள்
அகிலம் போற்றும் அன்னை இவள்

அருட்சகோதரி
அன்னை தெரேசா
ஏழைக்கும்,
எளியோர்களுக்கும், 

நோயால் வதைபடுவோர்க்கும்,
அனாதைகளுக்கும்,
முதியோர்களுக்கும்
தொண்டாற்றிய
தெய்வ மகள்......

உலகம் முழுவதும் புகழப்படும்
ஒரே அன்னை இவள்...

மணக்கும் மல்லி

மணக்கும் மல்லியாக
நான் மலர வேண்டும்

நீ வளர்க்கும் செடியில்
நான் மலராக வேண்டும்

எனக்கு நீர் ஊற்றி நீ
உயிர் ஊட்ட வேண்டும்

என் அருகில் அனுதினமும்
நீ நெருங்கி வர வேண்டும்

வாசனை வீசி உன்னை
ஈர்த்து மயக்க வேண்டும்

காற்றில் கலந்து உன்னை
நான் நெருங்க வேண்டும்

சுவாசித்து என்னை நீ
மனம் மகிழ வேண்டும்...

மூச்சாக உன்னுடன் கலந்து
மெய் சிலிர்க்க வேண்டும்!!!

உயிர் மூச்சாக உன் உள்ளே
என்றும் நிலைக்க வேண்டும்

உனக்காக மீண்டும் மீண்டும்
இப்புவியில் மலர வேண்டும்நட்பு

நட்பு என்ற மூன்றெழுத்தால்
இணைந்து
அன்பு என்ற மூன்றெழுத்தால்
மகிழ்ந்து
பாசம் என்ற மூன்றெழுத்தால்
பிணைந்து
சண்டை என்ற மூன்றெழுத்தால்
பிரிந்து
பிரிவு என்ற மூன்றெழுத்தால்
தவிக்கிறோம்
அன்பு என்ற மூன்றெழுத்தால்
மீண்டும் இணைவோமா???
நட்புடன் ...

விண்ணோரும் மண்ணோரும் வியக்க வாழ்வோம் ...கனவில் கண்ட உன்னை
கண்டு பிடித்து ,
கரம் பிடிக்க நினைத்து
காத்திருந்தேன்...

எனக்காக நீ பிறந்து
என்னை அறிந்து,
என்னிடம் சேர்ந்தாய்
என் எண்ணப்படி...

நாம் கரம் பற்றி என் கனவு
நனைவாக,
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க வாழ்வோம் மகிழ்வுடனே...