வியாழன், 24 மார்ச், 2016

காதல் நினைவுகள்!!


தூரத்து தூறலாய்
பக்கத்து சாராலாய்
உன் காதல் நினைவுகள்!!

பிடித்தவர்கள்


நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் இருக்க வேண்டும்
என நினைப்பதில் தவறில்லை!!
நம்முடன் மட்டுமே இருக்க வேண்டும்
என நினைப்பதே தவறு......

மனைவி


Sunday ல சண்டை போடாத மனைவியும்
Monday ல மண்டைய உருட்டாத
மேனஜரும்
கிடைத்த ஆண்கள் அனைவரும் அதிஷ்டசாலிகள்

முதியோர் இல்லம்


பெண்கள் நினைத்தால் அனைத்து
முதியோர் இல்லங்களையும்
நிரந்தரமாக மூடிவிட முடியும்...
தன் புகுந்த வீட்டினை
பிறந்த வீடாக நினைத்தால்...

நட்பு காதல்


நட்புக்காக காதலை விட்டவர்களை விட
காதலுக்காக நட்பை விட்டவர்களே அதிகம்!!
முன்னது புரிந்துகொள்ளும்..
பின்னது பிரிந்து செல்லும்!!

என்னவள்


வர்ணங்களும் தோற்றுவிடும்
வானவில்லும் நிமிர்ந்து பார்க்கும்
விண்மீன்கள் கண் அடிக்கும்
வீசும் தென்றல் மெய் சிலிர்க்கும்
உலகம் கூட சுழல மறக்கும்
வான் நிலா வெட்கப்படும்
என்னவள் சிரிக்கையிலே!!!

செவ்வாய், 15 மார்ச், 2016

ஏமாளிகள் கோமாளிகள் ...


ஏமாற்றப்படுகின்றோம் என தெரிந்தே ஏமாறுபவர்கள்
ஏமாளிகள் அல்ல கோமாளிகள் ...

தானம்


மனிதர்கள் மண்ணில் பிறக்கிறார்கள்
வாழ்ந்த பிறகு இறக்கிறார்கள்!!!
இறந்தும் சிலர் வாழ்கின்றார்கள்..
நீங்களும் வாழ வேண்டுமா?
செய்வீர் தானம்...
வாழும் போது இரத்த தானம்..
வாழ்க்கைக்குப் பிறகு கண் தானம்...

உணவு


படத்தை Zoom செய்து பார்க்கவும் ...
இது வெறும் தட்டு அல்ல ..
ஒரு உணவு பருக்கைக்காக
ஏங்கும் பல கைகள்...
Please don't waste food...

Life and Wife


Life and Wife இரண்டும் நாம்
பார்த்து பார்த்து Select செய்தாலும்,
கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் ..
நாம் தான் Adjust செய்து போகவேண்டும்.

ஏற்றுக்கொள்


இருப்பதை ஏற்றுக்கொள்
இல்லாததற்கு ஏங்காதே!!!

மதிப்பு


நம்மை மதிக்காதவர்களின்
கால்களால் மிதிபடுவதை விட,
நம்மை மதிப்பவர்களுடன்
கை குலுக்குவது சிறந்தது!!

காதல்


இறுதிவரை உறுதியாக காதலிக்க நினைப்பவர்கள் மட்டும் காதலியுங்கள்!!
திருமணத்திற்கு முன்போ, திருமணம் முடிந்தவுடனோ அல்லது இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகோ உங்கள் காதல் காணாமல் போகும் என நினைப்பவர்களே
நீங்கள் செய்வது காதலே அல்ல !!!

கடன்


கனவு காண கண்கள் உண்டு
கற்பனை திறனும் உண்டு
கல்வி மீது காதலுண்டு
கடன் வாங்கி வாங்கி
கட்டிய காசு,
காலம் முழுக்க வட்டி கட்டி கட்டி
கடனடைக்க இயலாமல்
அடிமையானான் பட்டதாரி...

விடியல்


கண்களில் ஏக்கம்
மனதில் ஆசை
வீட்டில் வறுமை
விடை தருமோ
நாளைய விடியல்!!!

வாழ்க்கை


விளையாட வேண்டிய பிஞ்சு
விற்கிறது வீதியில் !!
விதியை கேட்க வா??
வீதியில் விட்ட குடியை கேட்க வா??
வசந்தம் எங்கே - என்
வாழ்க்கை எங்கே??

போலிகள் !!!!


பல போலிகள் !!!!
படங்களில் மட்டும் அல்ல
பூலோகத்திலும்....

உண்மையான அன்பு...


போலிகளுக்கு மத்தியில்
உண்மையான அன்பு...

காதல்


இனிய இரவு வணக்கம் ...

இரவு இனிதாக
விடியல் உனதாக
வாழ்க்கை வசமாக
இனிய வாழ்த்துக்கள் !!
இனிய இரவு வணக்கம் ...

பாசம்


பாசத்திற்காக ஏங்கும் 
உயிர்கள் தான் அதிகம்
ஆனால், பாசம் காட்ட தான் 
யாரும் இல்லை இங்கே!!

விவாகரத்து

வீண் பிடிவாதம்,
வரட்டு கௌரவம்,
விட்டுக் கொடுக்காமையே
விவாகரத்தின் வாசல்கள்!!!

நண்பர்கள்


நம்மை நாமாக அப்படியே ஏற்றுக்கொள்ள
நம் நண்பர்களால் மட்டுமே முடியும்!!

திங்கள், 14 மார்ச், 2016

முயற்சி பயிற்சி


முயற்சியும் பயிற்சியும்
நிச்சயம் வெற்றி தரும்...

நினைவுகள்


சில நினைவுகளை
மறைத்து வைக்கலாம்..
மொத்தமாக
புதைத்து விட முடியாது !!

AMMA...


வலிகள் தந்த போதும்,
வசந்தம் தரும் தருணம்...

வயிற்றில் சுமந்த தருணம்..
வாரிசை பெற்ற தருணம்...

வரிகள் தேவை இல்லை...
விளக்க வரிகள் தேவை இல்லை....

காதல்


என்னோடு வா என்று
சொல்வதில்லை காதல்
உன்னோடு நான் இருப்பேன்
என்பதே காதல் !!!

எதுவும் நம்மிடம் இல்லை...


எல்லாம் நம்மிடம் இருப்பது போல்
இருந்தாலும்
எதுவும் நம்மிடம் இல்லை !!!

காதல்


சுகங்களை தருவது மட்டும்
காதல் அல்ல!!!
சில சோகங்களையும்
தருவதும் காதலே!!!

நம்பிக்கை


நாம் பழகும் அனைவரும்
நம்முடன் பழகும் அனைவரும்
நல்லவர்களாக தான் இருப்பார்கள்
என்ற நம்பிக்கையில் தான்
முகநூல் இயங்குகிறது ....

உறவு


உறவு என்ற மூன்று எழுத்தில்
இருப்பது சொந்தமும்
பந்தமும் மட்டும் அல்ல..
நம்பிக்கையும் பாசமும் கூட ...
இது உடைந்தால்
உறவை ஒட்ட முடியாது
கடவுளாலும்....

அண்ணா தங்கை..


அன்னையை தொலைத்த தங்கைகளுக்கு
அன்னையாக இருப்பது அண்ணாக்களே..

காதல்...


சிலருக்கு காதலை
சொல்ல
தைரியம் இல்லை..
பலருக்கு காதலை
ஏற்க
மனமில்லை...

காதலி ..மனைவி ...


காதலி எதை பேசினாலும்
இன்முகத்தோடு
ஏற்றுக்கொள்ளும்
காதலன்,
கணவனானதும்
மனைவி சரியாகவே
பேசினாலும்
ஏற்றுக்கொள்வதில்லை!!