மரிக்கின்ற எண்ணம் எனக்கில்லை இன்று
மரிக்கின்ற தருணம் வரும் வேலை உண்டு
நான் மடி சாய வேண்டும் உன் மடி மீது அன்று
என் துடிக்கின்ற இதயம் உன் மடி மீது போக
உயிர் பிரியும் முன்னே உன் முகம் காண வேண்டும்
விழி மூடும் முன்னே உன் விழி காண வேண்டும்
கேட்கின்ற குரல்கள் உனதாக வேண்டும்
மொழிகின்ற வார்த்தை உன் பெயராக வேண்டும்
விடுகின்ற மூச்சும் உன் நினைவாக வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக