புதன், 29 ஜூலை, 2015

கலாம் நம் பாரத தாய் பெற்ற செல்ல பிள்ளை



கலாம் நம் பாரத தாய் பெற்ற செல்ல பிள்ளை...நல்ல பிள்ளை ....

தாய்க்கும் தாய்நாட்டுக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் பெறும் முன்னேற்த்தை ஏற்படுத்தி தன் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் நல்ல நல்ல கருத்துக்களை எடுத்து கூறி நல்ல வழிகாட்டியாகவும் மாணவர்களின் அறிவு கண்ணை திறந்து மாணவர்களின் முன்னோடியாக வாழ்ந்த மா மனிதர்.

இந்தியா வல்லரசு நாடாக ஆசைப்பட்டார் . வளர்ந்த இந்தியாவை உருவாக்க மாணவர்களால் முடியும் என்று இளைய சமுதாயத்தின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

அரிய பல பொன் மொழிகள் மூலமாக ஊக்கத்தை விதைத்தவர். கனவு காண சொன்னார் ஆம் அதை கருத்தாய் காண சொன்னார்.

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என்னவாக பிறக்க ஆசை என்ற கேள்விக்கு அப்துல் கலாம் அவர்கள் எனக்கு மறு ஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை அப்படி இருந்தால் நாம் இப்போது இந்தியாவை வளர்ந்த நாடாக்க முயற்சிக்கிறோம். எனக்கு இந்தியாவில் மட்டுமே பிறக்க ஆசை. அதுவும் வளர்ந்த இந்தியாவில் பிறக்க ஆசை என்றார் ...

அவரின் கனவான வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் நமது மொத்த சக்தியை பயன்படுத்தி நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் .

இதுவே நாம் நம் மா மனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக