வியாழன், 9 ஏப்ரல், 2015

எங்கே செல்கிறது என் தேசம்




எங்கே செல்கிறது என் தேசம்
தமிழர் தமிழர் என்று
பெருமை கொண்டோம்
ஈராயிரம் ஆண்டுகள்
பழமை என்று
உவகை கொண்டோம்


இல்லை இல்லை
இருபதாயிரம் ஆண்டுகள்
தொன்மை என்று
மெய்சிலிர்த்தோம்
செம்மொழி செம்மொழி
என்று போற்றி புகழ்ந்தோம்

பாரதியும் கண்ணகியும்
வாழ்ந்த புரட்சி தேசமிது
உமையாளுக்கு சம உரிமை
கொடுத்த சிவனை
தொழும் புண்ணிய
பூமி இது

ஆனால் இன்றோ?
ஐயகோ...
எங்கே போகிறது என் தேசம்

தமிழுக்கு மதிப்பதில்லை
ஊருக்கு மழை இல்லை
உழவனுக்கு உணவில்லை
பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை

அதைவிட கொடுமை
என் சின்னஞ்சிறு
பிஞ்சுகளையும்
விட்டு வைப்பதில்லை
காம கொடூரர்கள்

பசியால் இறக்கலாம்
பிணியால் இறக்கலாம்
போரால் இறக்கலாம்
ஏன்
இயற்கை சீற்றங்களினாள்
கூட இறக்கலாம்

பண்பிழந்து
கற்பிழந்து
மானமிழந்து
பயத்துடன்
ஒவ்வொரு நிமிடமும்
வாழ்வதை விட

ஒட்டுமொத்தமாக
எங்களை எடுத்துக்கொள்ளும்
என் இயற்கை தாயே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக